Published:Updated:

கேரளாவில் எபோலா: வெளிநாட்டு சிறுவனுக்கு நோய்த் தாக்குதல் இருந்தது கண்டுபிடிப்பு!

கேரளாவில் எபோலா: வெளிநாட்டு சிறுவனுக்கு நோய்த் தாக்குதல் இருந்தது கண்டுபிடிப்பு!
கேரளாவில் எபோலா: வெளிநாட்டு சிறுவனுக்கு நோய்த் தாக்குதல் இருந்தது கண்டுபிடிப்பு!
கேரளாவில் எபோலா: வெளிநாட்டு சிறுவனுக்கு நோய்த் தாக்குதல் இருந்தது கண்டுபிடிப்பு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்திற்கு வந்த வெளிநாட்டு சிறுவனுக்கு எபோலா நோய்  தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பல ஆயிரம் பேர்  எபோலா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.மேலும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் எபோலாவின் தாக்கம் எதிரொலித்து பல பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதைத்  தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளுக்கு  பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலும் எபோலா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்கள் விமான நிலையத்தில் உள்ள மருத்துவ முகாமில் பரிசோதனை செய்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்திலும் எபோலா நோய் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நைஜீரிய நாட்டைச்  சேர்ந்த   10 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் நெடும்பாசேரிக்கு விமானம் மூலம் வந்தான். குடல் நோய் சம்பந்தமான சிகிச்சைக்காக வந்த அந்த சிறுவனுக்கு எபோலா நோய்த்  தாக்குதல் உள்ளதா? என்பதை கண்டறிய வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவனுக்கு எபோலா நோய் தாக்குதல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்  தொடர்ந்து அவன் உடனடியாக எர்ணா குளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அவனது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப்  பரிசோதனையின் முடிவில்தான் அவனுக்கு எபோலா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும்.