Published:Updated:

ஹரியானா: 20 அடி குழிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு!

குர்கான்: ஹரியானா மாநிலத்தில் 20 அடி குழிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை மீட்கப்பட்டது. 

ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள சுக்மா கிராமத்தில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த சச்சின் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை 20 அடி ஆழ குழிக்குள் விழுந்துவிட்டான். இந்த குழியை மின்வாரிய ஊழியர்கள் ஒரு பணிக்காக தோண்டியிருந்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் சச்சினின் தாய் பூஜா சத்தம் போட்டார்.இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர்.ஆனால் அவர்களால் முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்குள் குழந்தையை உயிருடன் மீட்டனர்.இதனால் கிராமத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஒரு வாரம் முன்பு தான் மஹி என்ற 4 வயது சிறுமி 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து,காப்பாற்ற முடியாமல் பிணமாக மீட்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.