Published:Updated:

``பாலினப் பாகுபாடும் சாதியப் பாகுபாடும் குழந்தைகளை வதைக்கின்றன!"- எழுத்தாளர் பாமா

`இரண்டு முக்கியமான நிலைகளில் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. ஒன்று பாலினப் பாகுபாடு; மற்றொன்று சாதியப் பாகுபாடு. இந்த இரண்டும் குழந்தைகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.’

குழந்தைகள் கடத்தல். குழந்தைத் திருமணங்கள், பாலியல் வன்கொடுமை எனக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே இருக்கின்றன. அண்மையில், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிர்தி இரானி, ``2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 3,18,748 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர்’’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்.

குழந்தைகள்  உரிமைகள்  குறித்த நாடகம்
குழந்தைகள் உரிமைகள் குறித்த நாடகம்

குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் ஓர் அங்கமாக `children believe' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் குழந்தைகளுக்கான `கற்றலும் பகிர்தலும்’ என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் போராடும் வளரிளம் போராளிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.

காந்தா ஹேமாவதி - ஆந்திர மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம்
காந்தா ஹேமாவதி - ஆந்திர மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம்

ஆந்திர மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் காந்தா ஹேமாவதி பேசுகையில், ``குழந்தைகளுக்கான பல திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்தாலும், அது முழுமையாக மக்களைச் சென்றடைவதில் பல்வேறு சிக்கல் இருக்கின்றன. இருப்பினும் எங்களுடைய மாநில ஆணையம் அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பற்காக கடுமையாகப் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வு, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் உரிமை போன்றவற்றில் பல்வேறு திட்டங்களைச் செய்து வருகிறது" என்றார்.

ஜுலியானா ஜின்- தைவானின் பொருளதார, கலாசார சென்னை மையத்தின் துணை இயக்குநர்
ஜுலியானா ஜின்- தைவானின் பொருளதார, கலாசார சென்னை மையத்தின் துணை இயக்குநர்

தைவானின் பொருளதார, கலாசார சென்னை மையத்தின் துணை இயக்குநர் ஜுலியானா ஜின் ``தைவானில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அந்தத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து குழந்தைகளுக்கான நல்ல திட்டங்களை மேம்படுத்தி வருகிறது" என்றும் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் பேசிய எழுத்தாளர் பாமா ``இரண்டு முக்கியமான நிலைகளில் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. ஒன்று பாலினப் பாகுபாடு; மற்றொன்று சாதியப் பாகுபாடு. இந்த இரண்டும் குழந்தைகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஒரு குழந்தை பிறக்கும்போதே ஆணா, பெண்ணா என்ற பாலினப் பாகுபாட்டிற்குள் மிக வன்மையாகத் தாக்கப்படுகிறது.

பாமா எழுத்தாளர்
பாமா எழுத்தாளர்

அடுத்ததாக அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது சாதி அவர்களை ஆட்டுவிக்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளும் ஒரு குழந்தையைப் பல உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன.

குழந்தைகள்  உரையாடல்
குழந்தைகள் உரையாடல்

இதில் பாலினத்தைக்கூட மாற்றவிடமுடியும். ஆனால், அந்தக் குழந்தை மீதான சாதியத் தாக்குதலை எந்த நிலையிலும் இதுவரை மாற்ற முடியவில்லை. இப்படியான மோசமான அவலம் இன்னும் இந்தச் சமூகத்தில் புரையோடிய ஒன்றாகத் தொடர்கிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தில் அவர்களுக்கான சுதந்திர வெளியை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகமாக இருக்கிறது. குழந்தைகளின் முக்கியமான பிரச்னைகளான சாதியை ஒழித்துவிட்டால் மற்ற பிரச்னைகள் அனைத்தும் தானாகவே முடிவுக்கு வந்து விடும்" என்றார் .

குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன், ``ஒரு குழந்தைக்கு நல்ல நம்பிக்கையை வளர்க்க வேண்டுமானால், முதலில் குழந்தை, தான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற மனநிலையை அவர்களிடத்தில் விதைக்கவேண்டும். அதற்கு முதலில் பொருளாதார, சாதியப் பாகுபாடற்ற சமூகத்தை நாம் அவர்களுக்கு அடையாளப்படுத்தவேண்டும். அதற்கான கடமை முதலில் அந்தக் குழந்தையைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு உள்ளது" என்றார்.

வேநேயன்– குழந்தைகள்  உரிமை செயற்பாட்டாளர்
வேநேயன்– குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்
"தமிழகத்தில் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இயங்குவதே இல்லை!" - தேவநேயன்
ஜிம் ஜேசுதாஸ், குழந்தைகள்  செயற்பாட்டாளர்
ஜிம் ஜேசுதாஸ், குழந்தைகள் செயற்பாட்டாளர்

குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் ஜிம் ஜேசுதாஸ், `` `குழந்தைகள் பாதுகாப்பு' என்று சொல்வதைவிட `குழந்தைகள் உரிமை பாதுகாப்பு' என்று சொல்வதிலேதான் அது வலிமை பெறுகிறது. குழந்தைகளின் உரிமைகளைப் பேசும்போது அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதிலேதான் அவர்களுடைய உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். மேலும் அவர்களை பங்கேற்கச் செய்வதன் மூலமாகத்தான் நாம் குழந்தைகளுக்கான அதிகாரமளித்தலை உறுதி செய்ய முடியும்" என்றார்.

குழந்தைகள்  உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம்
குழந்தைகள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம்

தூத்துக்குடியில் 10- க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்த மாணவி பேசுகையில், ``குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமையை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிற கல்வித் திட்டங்களை மாநில அரசு செய்யத் தவறுவது ஏன்? அவர்களுக்கான கல்வியைக் கூட அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால், இந்தச் சமூகத்தை எப்படி அவர்கள் எதிர்கொள்வார்கள்" என்று கேள்வியெழுப்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு