Published:Updated:

மதுரை முதல் ஐ.நா வரை...

பெற்றோருடன் நேத்ரா
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோருடன் நேத்ரா

என்னோட படிப்புச் செலவுக்குன்னு அப்பா அஞ்சு லட்ச ரூபாயை சேத்து வச்சிருந்தார். ‘இந்த இக்கட்டான நேரத்துல இருக்கிறதை எடுத்து உதவுங்கப்பா.. தேவைப்படும்போது, மத்த விஷயங்களை யோசிக்கலாம்’ன்னு சொன்னேன்.

மதுரை முதல் ஐ.நா வரை...

என்னோட படிப்புச் செலவுக்குன்னு அப்பா அஞ்சு லட்ச ரூபாயை சேத்து வச்சிருந்தார். ‘இந்த இக்கட்டான நேரத்துல இருக்கிறதை எடுத்து உதவுங்கப்பா.. தேவைப்படும்போது, மத்த விஷயங்களை யோசிக்கலாம்’ன்னு சொன்னேன்.

Published:Updated:
பெற்றோருடன் நேத்ரா
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோருடன் நேத்ரா

“நடக்குறது எல்லாமே கனவு மாதிரியிருக்கு சார்... கொரோனா வைரஸ் பாதிப்பால ஊரே முடங்கிக் கிடந்துச்சு. நாமும் முடங்கிப்போகாம சிரமப்படுறவங்களுக்காக எதையாவது செய்யனும்ன்னு யோசிச்சோம். அதுக்கான அங்கீகாரங்கள் உண்மையிலேயே உற்சாகமாயிருக்கு...”

மதுரை முதல் ஐ.நா வரை...

13 வயதுதான் நேத்ராவுக்கு. இந்தச் சின்ன வயதில் மற்றவர்களைப் பற்றியும் அவர்களின் துயரங்களைப் பற்றியும் சிந்தித்து தன் கல்விக்காக அப்பா சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துச் செலவு செய்ய தந்தையைத் தூண்டியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கீ பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பாராட்ட, ஒரே நாளில் கவனம் பெற்றார் நேத்ரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரதமர் மன் கீ பாத்தில் பாராட்டிப் பேசிய தகவல் வெளியான சில மணி நேரங்களில் மதுரை மாநகர பிஜேபி மாவட்ட தலைவர் கே.சீனிவாசன் தலமையில் நிர்வாகிகள், நேத்ராவின் தந்தை மோகன் வீட்டிற்கு சென்று சால்வை போர்த்தி வாழ்த்தியவர்கள் அப்படியே கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கிவிட்டு மோகன் குடும்பத்தினர் பிஜேபியில் இணைந்து விட்டதாக அறிவித்தனர். இந்த தகவல் பரவியவுடன் நான் பிஜேபியில் சேரவில்லை என்று மோகன் அறிவித்தார்.

 நேத்ரா
நேத்ரா

“நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அன்னைக்கு பிஜேபி நிர்வாகிகள் வாழ்த்து சொல்லி விட்டு உறுப்பினர் அட்டையை கொடுத்தார்கள். நான் மரியாதைக்காக அதை ஒரு வாழ்த்து அட்டையாக நினைத்து வாங்கிக் கொண்டேன். மற்றபடி நான் பிஜேபியில் சேரவில்லை. எனகு எல்லாக் கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர். நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்றார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தது.

UNADAP என்கிற தன்னார்வ அமைப்பு நேத்ராவை வறுமை ஒழிப்புக்கான நல்லெண்ணத் தூதராக அறிவித்ததோடு, அவரை உற்சாகப்படுத்த ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன் கல்விக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை மற்றவர்களுக்காகச் செலவு செய்த நேத்ராவின் கல்விச்செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து நெகிழ வைத்திருக்கிறார்.

நேத்ராவின் அப்பா மோகன்தாஸ், மதுரை மேலமடையில் சலூன் கடை நடத்துகிறார். கடைக்கு அருகிலேயே வீடு. 20 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம், கீழச்சிறுபோது கிராமத்திலிருந்து தொழில் செய்வதற்காக மதுரை வந்த குடும்பம். வேலையைக் கடந்து மேலமடை மக்களின் மனசுக்கு நெருக்கமாகிவிட்டார். நேத்ராவின் அம்மா பெயர் பாண்டிச்செல்வி. நேத்ரா ஒரே மகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இந்த ஊர்ல இருக்கிற எல்லாருமே தாயாப் பிள்ளையா பழகுறவங்க. கொரோனாவால ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால நிறைய பேருக்கு வேலையில்லாமப் போச்சு. ரொம்பவே கஷ்டப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா எப்பவுமே மத்தவங்க கஷ்டப்படுறதைப் பாத்துக்கிட்டிருக்க மாட்டார். அவரால முடிஞ்சளவுக்கு உதவி செஞ்சார். ஒரு கட்டத்துல தேவை அதிகமாயிடுச்சு. நிறைய பேர் தேடி வர ஆரம்பிச்சுட்டாங்க.

என்னோட படிப்புச் செலவுக்குன்னு அப்பா அஞ்சு லட்ச ரூபாயை சேத்து வச்சிருந்தார். ‘இந்த இக்கட்டான நேரத்துல இருக்கிறதை எடுத்து உதவுங்கப்பா.. தேவைப்படும்போது, மத்த விஷயங்களை யோசிக்கலாம்’ன்னு சொன்னேன்.

அதுக்குப்பிறகு, அந்தப் பணத்தையும் எடுத்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்கி மக்களுக்குக் கொடுத்தோம்.

பெற்றோருடன் நேத்ரா
பெற்றோருடன் நேத்ரா

எல்லோரும் பாராட்டுவாங்கன்னு இதைச் செய்யலே. ஆனா, நாங்க செய்யறதைக் கேள்விப்பட்டு வெளியூர்ல இருந்தெல்லாம் கூப்பிட்டு நெகிழ்ச்சியா பேசுனாங்க. பிரதமரும் பேசினதைக் கேட்டு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஐ.நா சபைக் கூட்டத்துல வறுமை ஒழிப்பு பத்தி பேசணும்ன்னு அழைச்சிருக்காங்க. நினைச்சாலே பெருமிதமா இருக்கு...” என்கிறார் நேத்ரா.

இந்தாண்டு நேத்ரா ஒன்பதாம் வகுப்பு செல்லவிருக்கிறார். கலெக்டராக வேண்டும் என்பது அவரது கனவு.

கனவு நிஜமாகட்டும் தங்கையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism