Published:Updated:

``போதைக்கு அடிமை... அடுக்குமாடி டு குடிசை...'' - ஸ்லம்டாக் மில்லியனர் சிறுவனின் இன்றைய நிலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்லம்டாக் சிறுவன் அசார் அன்றும் இன்றும்
ஸ்லம்டாக் சிறுவன் அசார் அன்றும் இன்றும்

"அசாருக்கு 18 வயது ஆகும் வரை எங்களுக்கு மாதம் ரூ.9,000 பணம் அனுப்பியது ஜெய் ஹோ அறக்கட்டளை. அவர்களுடன் போட்ட ஒப்பந்தத்தின்படி 18 வயதான பிறகு அசாருக்கு அனுப்பும் உதவித் தொகையை நிறுத்திக்கொண்டார்கள்."

``அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டு.... ஸ்லம்டாக் மில்லியனர்" என மேடையில் அறிவிக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். பார்வையாளர்களில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் கரவொலி எழுப்ப 2009-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதினைப் பெற, தனது குழுவினர் சூழ மேடையேறுகிறார் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் டேனி பாயல். டேனி பாயல் மேடையேறியதும் இரண்டு சிறுவர்கள் அவர் பின்னால் மேடையேறுகிறார்கள்.

அசார் முன்பு வசித்த இடம்
அசார் முன்பு வசித்த இடம்

அதில் ஒரு சிறுவனை மட்டும் இறுக அணைத்து பிறகு தனது இரண்டு கரங்களாலும் அவனுடன் ஹை-ஃபை செய்கிறார். மேடையேறிய ஒட்டுமொத்தக் குழுவும் அந்தச் சிறுவனை இறுக அணைத்து அன்பைத் தெரிவிக்கிறது. அந்தச் சிறுவனின் பெயர் அசார். 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்தில் சிறு வயது சலீம் கதாபாத்திரத்தில் நடித்தவர். படத்தில் நடித்த மற்ற எந்த நடிகருக்கும் அசாருக்குமான வித்தியாசம், அசார் நிஜவாழ்விலுமே ஒடுக்கப்பட்ட குடிசைச் சூழலில் வளர்ந்த பிள்ளை. திரைப்படம் வெளியான சமயம் பாந்த்ராவின் ரயில்வே பாதையோரம் போடப்பட்டிருந்த குடிசையை ஆக்கிரமிப்பு என்கிற அடிப்படையில் அகற்றித் தள்ளியிருந்தது மும்பை மெட்ரோ மாநகராட்சி.

`சிங்கம்’ டேனி முதல் ஏமி ஜாக்ஸன் வரை... கோலிவுட்டில் கலக்கிய ஹாலிவுட் நடிகர்கள்!
ஆஸ்கர் மற்றும் குழந்தைகளுடன் டேனி போயல்
ஆஸ்கர் மற்றும் குழந்தைகளுடன் டேனி போயல்

அந்தச் சமயம்தான் அசாருக்கும் படத்தில் நடித்த மற்றொரு குழந்தை நட்சத்திரமான ருபினாவுக்குமான கல்வி மற்றும் தேவைகளுக்காக ஜெய் ஹோ அறக்கட்டளையைத் தொடங்கியிருந்தார் டேனி பாயல். வீடிழந்து நின்ற அசாருக்கு உடனடியாக அந்த அறக்கட்டளை நாற்பத்து ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை அசார் குடும்பத்துக்காக வாங்கிக் கொடுத்தது. அந்த வகையில் அசார் டேனி பாயலின் செல்லப்பிள்ளை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டேனி பாயலுடைய செல்லப்பிள்ளையின் இன்றைய நிலை

அதே டேனி பாயலுடைய செல்லப்பிள்ளையின் நிலை இன்று 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்கிற கதையாக மீண்டும் குடிசைக்கே திரும்பியிருக்கிறது. தற்போது 21 வயது இளைஞனாகிவிட்ட அசார் தனது தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் அவர்களின் மூன்று பிள்ளைகளுடன் பாந்த்ரா பகுதியில் ஒற்றை அறை வீடு ஒன்றில் வசிக்கிறார்.

விற்ற வீடும் இன்று தங்கியிருக்கும் அறையும்
விற்ற வீடும் இன்று தங்கியிருக்கும் அறையும்
Mumbai Mirror

ஆஸ்கர் வாசம் தடயமின்றி மறைந்துபோன இடத்தில் வறுமையின் நெடி வீசுகிறது. "நான் குடிசைப் பகுதியில்தான் வளர்ந்தேன். ஆனால், திரும்பவும் இந்தக் குடிசைப் பகுதிக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். சூழல், பொருளாதாரம், கடன் தொல்லை என அத்தனையும் எங்கள் கழுத்தை நெரித்தது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆஸ்கர் புகழைவிட நிஜ வாழ்வின் யதார்த்தம்தான் கண் முன்னே தெரிகிறது. அதனால் வீட்டை விற்றுவிட்டோம். எங்கள் குடும்பத்துக்காகச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது" என்கிறார். கடனை அடைக்கத் தனது 49 லட்ச ரூபாய் அபார்ட்மென்ட் வீட்டினை விற்றிருக்கிறார் அசார்.

அசாரின் அம்மா ஷமீமா பேசுகையில், "அசாருக்கு 18 வயது ஆகும் வரை எங்களுக்கு மாதம் ரூ.9,000 ரூபாய் பணம் அனுப்பியது 'ஜெய் ஹோ' அறக்கட்டளை. அவர்களுடன் போட்ட ஒப்பந்தத்தின்படி 18 வயதான பிறகு அந்த உதவித் தொகையை நிறுத்திக்கொண்டார்கள். அதுவரை அறக்கட்டளையின் பெயரில் இருந்த அந்த வீடும் அசார் பெயருக்கு மாற்றி எழுதப்பட்டது.

ஆஸ்கர் வெல்லப் போவது யார்?

அதன்பிறகுதான் எங்கள் கடன் தொல்லையும் அதிகரிக்கத் தொடங்கியது. அசார் பிசினஸ் ஒன்றில் முதலீடு செய்து பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. கூடவே போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகிவிட்டான். அடிக்கடி உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டது. அசாரைக் குணப்படுத்த மருத்துவச் செலவுகள் அதிகமாகின. குடும்பத்துக்காக வாங்கிய கடனும் அதிகரித்தன. இந்தக் குடும்பத்துக்காக நிறைய செலவழித்துவிட்டேன். கடைசியில் அந்த வீட்டை விற்பதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு