மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் பிராண வாய்வு கிடைக்காமல் ஐந்து உயிர்கள் பறிபோன அவலத்தை மறக்க முடியாமல் தவிக்கிறோம். அதேசமயம் கேரள மாநிலத்தில் ஒரு பச்சிளம் குழந்தையின் மருத்துவச் சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடுசெய்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர். அவருக்குத் தமிழக நெட்டிசன்கள் பாராட்டு விழா எடுக்காத குறையாகப் புகழ்ந்துத்தள்ளுகிறார்கள்.

நிபா வைரஸ் தாக்குதல் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மே 8-ம் தேதி பகிர்ந்திருந்தார். மலப்புரத்தைச் சேர்ந்த ஜியாஸ் மாடசேரி என்பவர் அந்தப் பதிவின் பின் னூட்டத்தில், “வேறு வழியில்லா மல் இந்தத் தகவலை அனுப்பு கிறேன். என் சகோதரிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. குழந் தைக்கு இதய வால்வு சம்பந்தமான பிரச்னை இருக்கிறது. உடனடி யாக அம்ருதா மருத்துவமனை அல்லது ஸ்ரீசித்திரா மருத்துவமனைக்குச் சென்றால்தான் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த மருத்துவமனைகளில் படுக்கை காலியாக இல்லை என்று தெரிவித்துவிட்டனர். நீங்கள்தான் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்” என்று பதிவிட்டார்.

ஜியாஸ், பதிவிட்ட பத்தாவது நிமிடத்தில் அதிகாரிகள் அவரைத் தொடர்புகொண்டு குழந்தையின் பிரச்னை குறித்துக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் எர்ணாகுளம் லிசி மருத்துவமனையில் குழந்தைக்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுவிட்டதாகவும், ‘ஹிருதயம்’ திட்டத்தில் இலவசமாகக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர் தரப்பில் அதே ஃபேஸ்புக் பதிவில் பின்னூட்டமாகப் பதிவிடப்பட்டது. இந்தத் தகவல் ஜியாஸ் மாடசேரிக்கு போனிலும் தெரிவிக்கப்பட்டு, மே 8-ம் தேதி நள்ளிரவு எர்ணாகுளம் லிசி மருத்துவ மனையில் குழந்தைக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அமைச்சரின் இந்த வேகமான செயல்பாடு மாநிலத்தைத் தாண்டியும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

ஃபேஸ்புக்கில் உதவி கேட்ட ஜியாஸ் மாடசேரி யிடம் பேசினோம். “முதலில் அமைச்சரின் மொபைல் நம்பரில் அழைச்சோம். உதவியாளர் போனை எடுத்து அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் இருக்குறாங்கன்னு சொன்னாங்க. வேறுவழி தெரியாமதான் அமைச்சரோட ஃபேஸ்புக் பக்கத்துல எழுதினேன். கொஞ்ச நேரத்துலயே அதிகாரிகள் எங்களிடம் போனில் பேசினாங்க. சிகிச்சைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டதாக அமைச் சரே எங்ககிட்ட தெரிவித் தார். அமைச்சரே நேரடியாக கவனம் எடுத்து குழந்தையைக் காப்பாத்தினது என் வாழ்க்கையில மறக்க முடியாதது. ஷைலஜா டீச்சர் நீங்க நல்லா இருக்கணும்” என்றார் நெகிழ்ச்சியாக.

கடந்த ஆண்டு, நிபா வைரஸ் கேரளத்தைத் தாக் கிய சமயத்தில் சாமர்த்திய மாகச் செயல்பட்டு அதைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார் சைலஜா டீச்சர். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இவர், படிக்கும் காலத்திலேயே இடதுசாரி சிந்தனைகொண்டவர். சி.பி.எம் கட்சியின் டி.ஓய்.எஃப்.ஐ அமைப்பில் தீவிரமாக இயங்கினார். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர், தீவிர அரசியலில் ஈடுபட்டு, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆசிரியர் பணியைத் துறந்தார். மூன்று முறை எம்.எல்.ஏ ஆகி, இப்போது அமைச்சர் ஆன பிறகும் கேரளத்து மக்கள் இவரை ‘ஷைலஜா டீச்சர்’ என்றே அன்போடு அழைக்கிறார்கள். குழந்தைக்கு உதவியது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோன்று பலருக்கும் எதிர்பாராத நேரத்தில் உதவிசெய்து அசத்துவது அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சரின் இயல்பு என்கிறார்கள் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சரிடம் பேசினோம். “குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து என் கவனத்துக்கு வந்ததும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்தேன். குழந்தை பிறந்த முதல்நாளே அறுவைச்சிகிச்சை மூலம் வால்வு பிரச்னையை சரிசெய்திருக்க வேண்டும். குழந்தைக்கு வேறு சில உடல் உபாதைகளும் இருந்ததால், முதல்நாள் அறுவைச்சிகிச்சை செய்ய முடியவில்லை. இதயப் பிரச்னைக்கு உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்வதற்கு வசதிகள் உள்ள திருவல்லாவில் உள்ள பிலீவர்ஸ் சர்ச் மெடிக்கல் கல்லூரியில் அதற்கான ஏற்பாடு களை மருத்துவர்கள் செய்துள்ளார்கள். குழந்தை களின் உயிர்காக்கும் சிகிச்சைக்காக அரசு எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

- ஆர்.சிந்து, படங்கள்: ரா.ராம்குமார்