Published:Updated:

" அந்தப் பையனோட அம்மா அப்படியே கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க" - நெகிழும் தமிழிசை!

" அந்தப் பையனோட அம்மா அப்படியே கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க" - நெகிழும் தமிழிசை!
" அந்தப் பையனோட அம்மா அப்படியே கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க" - நெகிழும் தமிழிசை!

பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே ஓர் அதிகார தோரணையும், சாமானியர்களால் நெருங்கமுடியாது என்கிற பிம்பமும் இருக்கும். ஆனால், அரசியல்வாதிகளில் பலர், தனிப்பட்ட முறையில் மிகுந்த மனிதநேயவாதிகளாக இருப்பார்கள். கொள்கை, அரசியல், கட்சி என்பதைத் தாண்டி மக்கள் மனதில், பல அரசியல் தலைவர்கள் நிலைத்து நிற்க அவர்களின் இத்தகைய மனிதநேயச் செயல்களே காரணம். அப்படி தற்போது, தன் உதவியின் மூலம் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

" அந்தப் பையனோட அம்மா அப்படியே கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க" - நெகிழும் தமிழிசை!

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், பாஜகவின் வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழிசை, தேர்தல் பிரசாரத்தின் போது சந்தித்த,

" அந்தப் பையனோட அம்மா அப்படியே கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க" - நெகிழும் தமிழிசை!

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட 16 வயதுச் சிறுவனுக்கு உதவியிருப்பது தற்போது செய்தியாகியுள்ளது. 

இந்தச் சம்பவம் குறித்து தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம்,

``பொதுவா நான் வேன்'ல பிரசாரம் பண்ணும்போது கீழே நிக்குற மக்கள் எல்லோரையும், கூர்ந்து கவனிப்பேன், இறங்கிக் கை கொடுப்பேன். ஏப்ரல் 15 ம் தேதி, ஶ்ரீவைகுண்டம் யூனியன்ல இருக்கிற சுப்ரமணியபுரம்ங்கிற ஊர்ல பிரசாரம் செஞ்சிட்டு இருந்தேன். அப்போ, ஒரு வயதான அம்மாவும், நடுத்தர வயதுப் பெண்ணும் அழுதபடி, ஒரு சின்னப்பையன் கூட நின்னுட்டு இருந்தாங்க. வேனை உடனே நிறுத்தச் சொல்லி அவங்க பக்கத்துல போய், `ஏன் அழுகுறீங்க'னு கேட்டேன். `என் பையன் பேரு மகராசன், வயசு பதினாறுதான். ஆனா, ரெண்டு கிட்னியும் கெட்டுப் போச்சு. ஆஸ்பத்தியிரியில வச்சு செலவழிக்கிற அளவுக்கு எங்ககிட்ட வசதி இல்ல. என்ன செய்றதுனு தெரியாம இருந்தோம்.

இன்னைக்கு பிரசாரத்துக்கு வர்றவங்க டாக்டர்னு சொன்னாங்க. அதான் ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்தோம்மா'னு சொன்னாங்க. `இந்த மாதிரி கஷ்டப்படுற ஏழை மக்களுக்காகத்தான், அரசாங்கத்துல மருத்துவ (பிரதமர்) காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்துருக்காங்கன்னு' சொன்னேன். அவங்களுக்கான காப்பீட்டுத் திட்ட அட்டை இன்னும் கிடைக்கலைனு சொன்னாங்க. `என் கணவர் டயாலிசிஸ் மருத்துவர்தான்... கண்டிப்பாக உதவி செய்கிறேன். நாளைக்குக் காலையில என்னை வந்து பாருங்க'னு, நான் தங்கியிருந்த இடத்தோட அட்ரஸைக் கொடுத்துட்டு வந்தேன்.

" அந்தப் பையனோட அம்மா அப்படியே கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க" - நெகிழும் தமிழிசை!

அடுத்த நாள் காலையில ஆறரை மணிக்கே அந்தப் பையன்கூட, அவங்க அம்மாவும், பாட்டியும் வந்தாங்க. என்னோட கணவர் மருத்துவர் சௌந்தரராஜன், அந்தப் பையனை பரிசோதனை செஞ்சு, உடனே, பையனை மருத்துவமனையில அனுமதிக்கணும்னு சொன்னாங்க. நான் அந்தப் பையனோட  குடும்பச் சூழலை எடுத்துச் சொன்னேன். என் கணவரோட மாணவர், குலசேகரத்துல மருத்துவமனை வச்சுருக்கார். அவங்ககிட்டப் பேசி, இலவசமா சிகிச்சை கிடைக்க ஏற்பாடு பண்ணினார். அவங்க அம்மா கிட்னி தரத் தயாரா இருக்காங்க, ஆனா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ற அளவுக்கு அந்தப் பையனோட உடல்நிலை இப்போ இல்லை. அதனால, கடந்த இரண்டு வாரங்களாக டயாலிசிஸ் போய்ட்டு இருக்கு. சிகிச்சை, மாத்திரை மருந்துகள் எல்லாம் இலவசமாகத்தான் கொடுத்துட்டு இருக்காங்க. 

எதிர்காலத்துல, அவங்களுக்குத் தேவைப்படும்னு காப்பீட்டு அட்டை கிடைக்கிறதுக்கான ஏற்பாடும் செஞ்சு கொடுத்துருக்கேன். நேத்துதான் அந்தப் பையனைப் போய் மருத்துவமனையில பார்த்தேன். இப்போ, உடல்நிலை, நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அவங்க அம்மா, கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. இதைவிட வாழ்க்கையில வேற என்ன வேணும். கட்சி, கொள்கை, தேர்தல் மட்டும் அரசியல் இல்ல, மக்களோட நேரடியா இணைஞ்சிருக்குறதுதான் உண்மையான அரசியல். நான் அப்படி ஓர் அரசியல்வாதியா இருக்கணும்னுதான் ஆசைப்படுறேன். அப்படிதான் இருந்துட்டும் வர்றேன் '' - மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். 

" அந்தப் பையனோட அம்மா அப்படியே கண்ணீரோட என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க" - நெகிழும் தமிழிசை!

நேற்று, அந்தச் சிறுவனை குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஷயத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார் தமிழிசை. தமிழிசையின் இந்தச் செயலுக்கு, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்திருக்கிறது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, பல இளைஞர்கள் தமிழிசை சௌந்தர்ராஜனைப் பாராட்டி வருகிறார்கள்.

Vikatan