Published:Updated:

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராத மர்மம் என்ன?

ரேபிட் டெஸ்ட் கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
ரேபிட் டெஸ்ட் கருவிகள்

‘சீனாவின் பரிசோதனைக் கருவிகள் தரமற்றவையாக உள்ளன’ எனப் பல்வேறு நாடுகள் புகார் செய்தன.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராத மர்மம் என்ன?

‘சீனாவின் பரிசோதனைக் கருவிகள் தரமற்றவையாக உள்ளன’ எனப் பல்வேறு நாடுகள் புகார் செய்தன.

Published:Updated:
ரேபிட் டெஸ்ட் கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
ரேபிட் டெஸ்ட் கருவிகள்
‘சீனாவிலிருந்து ஏப்ரல் 16 அன்று ஆறரை லட்சம் கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகள் டெல்லி வந்து சேரும்’ என அறிவித்தபோது, இந்திய அதிகாரிகள் முகத்தில் பெரும் நிம்மதி. ஆனால், சீன நிறுவனங்கள் சொன்ன நேரத்தில் கருவிகளை அனுப்பாமல், நான்கு முறை வாக்கு தவறின. ஊரடங்கு உத்தரவு அறிவித்து 130 கோடி மக்களை வீடுகளுக்குள் முடக்கிவிட்டு, துரிதமாக நடத்தி முடிக்க வேண்டிய பரிசோதனைகள், இதனால் இரண்டு வாரங்களுக்குமேல் தள்ளிப் போயின. என்னதான் நடக்கிறது?

ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி, இந்த ஊரடங்கு நேரத்தில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) திட்டமிட்டது. இதற்காக 45 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவில் வாங்க ஐ.சி.எம்.ஆர் ஆர்டர் செய்தது. ஏப்ரல் முதல் வாரத்துக்குள் இதில் ஏழு லட்சம் கருவிகள் வந்திருக்க வேண்டும். இதேபோல் பல்வேறு மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும்கூட சீனாவில் ஆர்டர் செய்திருந்தன. ஆனால், யாருக்குமே வரவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காரணம்? ‘சீனாவின் பரிசோதனைக் கருவிகள் தரமற்றவையாக உள்ளன’ எனப் பல்வேறு நாடுகள் புகார் செய்தன. நிறைய கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால், சீன அரசு விதிகளைக் கடுமையாக் கியது. தேசிய மருத்துவப் பொருள்கள் நிர்வாக அமைப்பு ஒன்றை உருவாக்கி, ‘இதில் பதிவுசெய்வோர் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்’ என அறிவித்தது. சுமார் 10 நிறுவனங்கள் மட்டுமே இப்படிப் பதிவுசெய்து ஏற்றுமதி லைசென்ஸ் பெற்றுள்ளன. இவர்களின் தயாரிப்புகளும் கடும் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. இந்த நடைமுறைகளால் திடீர் காலதாமதம் ஏற்பட்டது. கூடவே, கருவிகளின் விலையும் உயர்ந்தது.

விக்ரம் மிஸ்ரி - டெர்ரி பிரான்ஸ்டட்
விக்ரம் மிஸ்ரி - டெர்ரி பிரான்ஸ்டட்

இதனால் பொறுமை இழந்த மத்திய அரசு, சீன தலைநகர் பீஜிங்கில் இருக்கும் இந்தியத் தூதரான விக்ரம் மிஸ்ரியைக் களத்தில் இறக்கியது. அவர் சீன அதிகாரிகளையும் மருத்துவப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தினரையும் தொடர்புகொண்டபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது. சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் டெர்ரி பிரான்ஸ்டட் ஏற்கெனவே இதே வேலையை பல நாள்களாகச் செய்துகொண்டிருந்தார்.

கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 1,200 டன் மருந்துகள் மற்றும் உபகரணங்களை சீனாவிலிருந்து அமெரிக்கா கொள்முதல் செய்துள்ளது. அதை கொள்முதல் என்றெல்லாம் சொல்ல முடியாது... அசுரத்தனமாக வாங்கி, கிடைக்கும் விமானங்களில் எல்லாம் ஏற்றி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். விதிமுறைகள் மாறியபோதும் அவர்கள் கவலைப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘3 எம்’ என்ற அமெரிக்க நிறுவனம், சீனாவில் தொழிற்சாலை வைத்துள்ளது. அவர்கள் தயாரித்த ரேபிட் டெஸ்ட் கருவிகளையும் தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என சீன அதிகாரிகள் சொன்னார்கள். அமெரிக்கத் தூதர் நேரடியாகத் தலையிட்டு, ‘‘இது அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு அமைப்பு அங்கீகாரம் பெற்றது. நீங்கள் பரிசோதனை செய்யத் தேவையில்லை’’ என்று பரிசோதனையைத் தடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தார்.

ஆதிக்கம் செலுத்தியும் அதிக பணம் கொடுத்தும் பல நிறுவனங்களை அமெரிக்கர்கள் வளைத்துவிடுகிறார்கள். உதாரணமாக, குவாங்சூ நகரில் உள்ள Wondfo நிறுவனத்திடம் ஐந்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர் கேட்டிருந்தது. ஆனால், அங்கு தயாரான கருவிகள் முதலில் அமெரிக்காவுக்கே போயின.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராத மர்மம் என்ன?

சீன நிறுவனங்கள் தாமதம் செய்கின்றன என்பதால், ‘விலை அதிகமானாலும் பரவாயில்லை’ என வேறு நாடுகளையும் இந்தியா நாடியது. ரேபிட் டெஸ்ட் கருவி வாங்க வேண்டுமென்றால், அதற்கு ஐ.சி.எம்.ஆர் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாடு அலுவலர் அனுமதி வேண்டும். அவசர அவசரமாக ஏப்ரல் 14 வரை 51 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். இதில் சீன நிறுவனங்கள் மட்டுமே 40. தென் கொரியாவில் ஐந்தும், இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தலா ஒரு நிறுவனமும் அனுமதி பெற்றுள்ளன.

இந்தியாவில் மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. குஜராத்தின் Voxtur Bio, டெல்லியின் Vanguard Diagnostics, மத்திய அரசின் HLL Lifecare Limited ஆகியவையே அவை. இவை தயாரிப்பில் இறங்க இரண்டு, மூன்று வாரங்கள் ஆகலாம். அதற்குள் சீனா மற்றும் தென் கொரியாவிலிருந்தும் கருவிகள் வந்து சேர்ந்துவிடும். எனவே, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மே 3-ம் தேதி வரையிலான ஊரடங்கு முடிவுக்கு வரும்போது இந்தியாவில் பரிசோதனைகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கலாம்.

தமிழக கருவிகள் அமெரிக்கா போனதா?

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராத மர்மம் என்ன?

‘தமிழகத்துக்கு கடந்த வாரமே வந்து சேர வேண்டிய 50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் அமெரிக்கா போய்விட்டன’ எனத் தகவல் வெளியானது. எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதின. சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரியிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, ‘‘நானும் செய்திகளில்தான் படித்தேன். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை’’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism