தீர்வை நோக்கிச் செல்லும் இடமே பிரச்னையைத் தொடங்கும் இடமாக அமைந்துவிட்டால் என்னவாகும்?!

அதுபோன்றதொரு நிலைதான் இப்போது கொரோனா வைரஸ் விஷயத்தில் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளே, நோயைப் பரப்பும் இடமாக மாறி வருகின்றன.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டார் 85 வயது மூதாட்டி ஒருவர். சில தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதற்கான மூலத்தை ஆராய்ந்தபோது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரிடமிருந்து அவருக்கு நோய் பரவியிருக்கிறது. அந்த மருத்துவருக்கு, வேறொரு நோயாளி யிடமிருந்து தொற்று ஏற்பட்டிருக்கிறது.

சென்னை தனியார் மருத்துவ மனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு, கல்லீரல் தானத்தை தாயே வழங்க இருந்தார். தாய்க்கு, அறுவைசிகிச்சைக்கு முன்பான பரிசோதனைகள் செய்தபோது கொரோனா பரிசோதனையும் செய்யப்பட, யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்தப் பெண் அனுமதிக்கப் பட்டிருந்த வார்டில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களையும் தனிமைப்படுத்தியது மருத்துவமனை நிர்வாகம். அந்தப் பகுதியே மூடப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

இப்படி, மருத்துவமனைகளில் தங்களின் உடல்நலப் பிரச்னைகளுக் காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனையிலிருந்து கொரோனா பரவுவதும், வேறு பிரச்னைக்காக சிகிச்சைக்குச் செல்லும் நோயாளி களிடமிருந்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நோய் பரவுவதும் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.இராமலிங்கத்திடம் பேசினோம். ‘‘மாரடைப்பு, குடல்வால் பிரச்னை என அவசர மருத்துவ நிலையில் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துவரும்போது, ‘கோல்டன் ஹவர்’ எனச் சொல்லப்படும் பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்குள் அவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டு அவர் காப்பாற்றப்பட வேண்டும் என்றே மருத்துவர்கள் விரைவார்கள். அந்த நிமிடங்களில், அவருக்கு கொரோனா தொற்று இருக்குமா என்பதைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். ஒருவேளை அந்த நோயாளிக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அவருக்கு சிகிச்சையளித்த அனைவருக்கும் அது பரவிடலாம். அப்படித்தான் தமிழகத்தில் உயிரிழந்த இரண்டு மருத்துவர் களுக்கும் நேர்ந்தது.

எலும்பியல் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை மருத்துவர்கள், அவசர சிகிச்சையில் பணியாற்றும் மருத்துவர்கள், இதயவியல் மருத்துவர்கள், மயக்கநிலை மருத்துவர்கள் ஆகியோர் இதில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப் புள்ளது. இவர்கள் மூலம் பிற நோயாளிகளுக்கும், சக மருத்துவர்களுக்கும் நோய் பரவும். கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட ஓர் ஆண்டுகூட ஆகலாம் எனச் சொல்லப் படுகிறது. அதுவரை மருத்துவப் பணியாளர்களின் நலனைக் காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகள், அங்கு பணியாற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது மட்டுமே மருத்துவ மனையிலிருந்து நோய் பரவலைத் தடுப்பதற்கான வழியாக அமையும்’’ என்றார்.

‘‘கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கவச ஆடைகள் தரமில்லாமல் இருப்பதும் மருத்துவமனையில் நோய் பரவலுக்கு கூடுதல் பங்களிக்கிறது’’ என்கிறார், சமூக சமத்துவத் துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி. ‘‘கவச உடையான அந்த ஹேஸ்மெட் சூட் (Hazmat suit), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவிட் சிகிச்சை மையங்களுக்கும் வழங்கப் படவில்லை. கொடுக்கப்பட்ட சில இடங்களிலும் உபயோகிக் காமல், அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காகச் சேமித்துவைத்திருக்கிறார்கள். இதைவிட அவசர காலம் எப்போது வரும்?

இறக்குமதி செய்யப்படும் இந்தக் கவச உடைகளின் தரக்குறைவால், சிகிச்சை அளிக்கும்போது நோயாளியின் ரத்தம், உமிழ்நீர் போன்றவை தெறித்தால், மருத்துவத் துறையினருக்கும் தொற்று ஏற்படும். சொல்லப்போனால், இறக்குமதி செய்யப்படுப வற்றைவிட தமிழகத்தி லேயே தரமான கவச உடைகள் தயாரிக்கப் படுகின்றன. போக்குவரத்து முடக்கத்தால் அவை உற்பத்திப் பகுதிகளிலேயே முடங்கி யுள்ளன. அவற்றை, தேவையை நோக்கிக் கொண்டுசேர்க்கும் முறையை அரசு இன்றும் முன்னெடுக்கவில்லை’’ என்கிறார்.

மருத்துவமனையிலிருந்து நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம். ‘‘கிருமி நீக்கம் செய்வது, நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறோம். மருத்துவமனையிலிருந்து நோய்த்தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்’’ என்றார்.

மக்களை வீடுகளுக்குள் முடக்கிவைத்துவிட்டு, மருத்துவமனைகளே நோயைப் பரப்பும் இடங்களாக மாறிவிடக் கூடாது. பிற நோயாளிகளும் மருத்துவர்களும் நோய்த்தொற்று பெறும் இந்த ஆபத்தில், அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்பதே அனைவரும் எதிர்பார்ப்பது.

மருத்துவமனைகள் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க, இந்திய மருத்துவச் சங்கத்தின் (IMA) தமிழக கிளையின் மூலமாக தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாவட்டம் வடவள்ளியில் ‘சமூகக் காய்ச்சல் கிளினிக் (Community Fever Clinic)’ தொடங்கப்பட்டுள்ளது.

ஐ.எம்.ஏ-வின் தமிழக கிளைச் செயலாளர் மருத்துவர் ஏ.கே.ரவிக்குமாரிடம் இதுதொடர்பாகப் பேசினோம். ‘‘இது தமிழக அரசு அனுமதியளித்துள்ள மருத்துவமனை. காய்ச்சல் இருக்கும் நோயாளிகள், தங்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் உள்ளவர்கள், நேராக பொது மருத்துவமனை களுக்குச் செல்லாமல், இந்த கிளினிக்குக்கு வரலாம். இங்கு அவர்களுக்கு ஆரம்பநிலை பரிசோதனைகள் செய்யப்படும். சாதாரண காய்ச்சல் எனில், தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். கொரோனா அறிகுறிகள் இருந்தால், அவர்கள் இங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இதனால், அவர்கள் பொது மருத்துவமனைகளில் கலப்பது தவிர்க்கப்படும்.

இந்த இலவச கிளினிக், தனிமனித இடைவெளியுடனும் சுயசுகாதாரத்தைப் பேணும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரை,

3 மணி முதல் 6 மணி வரை என இரண்டு ஷிஃப்ட்களில் இயங்கும். ஒரு ஷிஃப்ட்டுக்கு ஒரு மருத்துவர், நான்கைந்து செவிலியர்கள், கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம்செய்ய தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இருப்பார்கள். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே சமூகக் காய்ச்சல் கிளினிக் அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

தமிழகத்தின் 12 ஹாட் ஸ்பாட் மாவட்டங்களில் சமூகக் காய்ச்சல் கிளினிக்குகள் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.