Published:Updated:

நான்காம் கட்டத்தில் தமிழகம்!

கொரோனா பாதிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா பாதிப்பு

எச்சரிக்கும் மருத்துவர்

கொரோனா குறையுமா, எகிறுமா? - இதுதான் அனைவரின் மனத்திலும் உள்ள கேள்வி! ஊரடங்கு அறிவிக்கப் படுவதற்கு முன், ‘கொரோனாவின் உச்சக்கட்ட நிலை ஜூலை மாத நடுவில் ஏற்படும்’ என எதிர்பார்க்கப்பட்டது.

பிறகு, ‘தடுப்பு நடவடிக்கைகள் ஜூன் வரை மேற்கொள்ளப்பட்டால், நான்கு மாதங்கள் தள்ளிப்போடப்பட்டு அக்டோபரில் அதன் உச்சக்கட்டம் ஏற்படலாம்’ எனக் கூறப்பட்டது. இப்போது, ‘மே 17-லிருந்து தளர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டால், செப்டம்பர் மாத நடுவிலேயே உச்சக்கட்டம் வந்துவிடக்கூடும்’ என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-யைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்த நிலையிலும், ‘இன்று வரை நாம் `சமூகப் பரவல்’ எனப்படும் மூன்றாம்கட்ட தாக்குதலுக்குள்ளேயே செல்லவில்லை’ என்கிறது தமிழக அரசு.

சுந்தரராமன்
சுந்தரராமன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உண்மையில் நாம் எந்தக் கட்டத்தில்தான் இருக்கிறோம்? மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின்கீழ் பணிபுரிந்த மூத்த மருத்துவர் சுந்தரராமனிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘தமிழகம், இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது?’’

‘‘நான்காவது நிலையான எபிடெமிக்கில் இருக்கிறது. எபிடெமிக்கில் சில சூழல்கள் இருக்கின்றன. அதன்படி, இனிவரும் நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் எண்ணிக்கை, ஒருகட்டத்துக்குமேல் தானாகக் குறையும். அப்போது எண்டெமிக் சூழலை அடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைரஸ் முடிவுக்கு வரலாம்.’’

‘‘எண்டெமிக் நிலை என்பது என்ன, அது எப்போது ஏற்படும்?’’

‘‘எண்டெமிக் என்பது, நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது. இப்போது சீனா, இத்தாலி போன்ற நாடுகள் எல்லாம் இந்த நிலையில்தான் இருக்கின்றன. இந்த நிலை, தாமதமாக ஏற்படுவதே சரி. ஏனெனில், எந்தளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக உயர்கிறதோ, அந்தளவுக்கு தாமதப்பட்டே எண்ணிக்கை குறையும்.’’

நான்காம் கட்டத்தில் தமிழகம்!

‘‘தமிழக அரசு, ‘கான்டாக்ட் ட்ரேஸிங் செய்கிறோம்’ என்ற கருத்தை முன்னிறுத்தி, இரண்டாவது நிலையில் நாம் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் நீங்களோ, நான்காவது நிலைக்கே வந்துவிட்டோம் என்கிறீர்கள்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?’’

‘‘எந்த நிலைக்கு நாம் சென்றாலும், கான்டாக்ட் ட்ரேஸிங் தேவைதான். காரணம், இந்திய மருத்துவக் கோட்பாட்டின்படி, `ரேண்டம் மாஸ் டெஸ்டிங்’ எனப்படும் அனைவருக்குமான பரிசோதனை நமக்கு சாத்தியப்படாது. தொற்றுக்கான வாய்ப்பு இருப்பவர்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். அந்த வகையில், கான்டாக்ட் ட்ரேஸிங் கட்டாயம் தேவை. இங்குதான் அரசு குழப்பத்தை உண்டாக்குகிறது. கான்டாக்ட் ட்ரேஸிங் மூலம் நோயாளிகளைக் கண்டறிகிறோம் என்ற அடிப்படையில், ‘இரண்டாவது நிலையில் இருக்கிறோம்’ என்கிறது. கான்டாக்ட் ட்ரேஸிங் என்பது எல்லா நிலைக்குமானது!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அரசுத் தரப்பில், `ஒருவேளை கொரோனா சமூகப் பரவலுக்குச் சென்றாலும், அடுத்தடுத்த நிலைகளுக்கு அது செல்லாது’ என்கிறார்களே... அது உண்மையா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. அறிவியல் கூற்றுகளின்படி, உலகளாவிய நோய்த்தொற்று ஒன்றில் நாம் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றே தீர்வோம். எவ்வளவு மெதுவாகச் செல்கிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. அப்படி அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும்போது, அதை முறையாகக் கையாண்டால் இறப்புகளைக் குறைக்கலாம்.’’

நான்காம் கட்டத்தில் தமிழகம்!

``கொரோனாவின் அடுத்தடுத்த நிலைகளில், நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என்கிறீர்கள். அந்த பீக், எந்த மாதத்தில் வரும் எனச் சொல்ல முடியுமா?’’

``மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்றினால், செப்டம்பர் அல்லது அக்டோபரில் பீக் வரும். காலம் தாழ்த்திய, தள்ளிப்போடப்பட்ட பீக் என்பதால் அது பெரிய சிக்கலாக இருக்காது. ஒருவேளை சரியாகப் பின்பற்றப் படாவிட்டால், பீக் விரைவாக ஏற்படும்.’’

‘‘பரிசோதனை விஷயத்தில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இன்னமும் கவனம் தேவையா?’’

‘‘முன்னோடி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இது போதாது. காரணம், சென்னையில் செய்யப்படும் அளவுக்கான பரிசோதனைகள் பிற மாவட்டங்களில் செய்யப் படுவதில்லை. ‘சென்னையில் மட்டும் ஏன் அதிக பரிசோதனைகள் செய்யப்படு கின்றன?’ எனக் கேட்டால், கோயம்பேடு மார்க்கெட்டைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருக்கவில்லை எனில், கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் தீவிர நோய்ப்பரவல் ஏற்படலாம். நம்மால் அதை கணிக்க முடியாது. ஆகவே, தொடக்கத்திலேயே எல்லா இடங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி பரிசோதனைகளை அதிகரிக்கும்போது தீவிரப் பரவல் தடுக்கப்பட்டு, நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும். அதுமட்டுமே, பிரச்னையைக் கட்டுப்படுத்தும்.’’