Published:Updated:

``பிரசவகால மரணம் 99.9% குறைக்கப்பட்டுள்ளது; காரணம் இதுதான்!" - மருத்துவர் கு.சிவராமன்

கு.சிவராமன்

அண்மையில் கபசுரக் குடிநீரை நாங்கள் அரசுக்கு பரிந்துரைத்போது அவ்வளவு எதிர்ப்புகள்

``பிரசவகால மரணம் 99.9% குறைக்கப்பட்டுள்ளது; காரணம் இதுதான்!" - மருத்துவர் கு.சிவராமன்

அண்மையில் கபசுரக் குடிநீரை நாங்கள் அரசுக்கு பரிந்துரைத்போது அவ்வளவு எதிர்ப்புகள்

Published:Updated:
கு.சிவராமன்
சூழலியல், உணவியல், சித்த மருத்துவம் தற்போது தமிழக அரசின் திட்டக் குழு உறுப்பினர் என பன்முகம்‌ கொண்டவர், மக்களிடையே இன்று பேராதரவும் அன்பும் பெற்றவர் மருத்துவர் கு.சிவராமன். கதைப்போமா நிகழ்ச்சியில் பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் அவர் உரையாடியதிலிருந்து சில துளிகள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சித்த மருத்துவம் என்பது மாற்று மருத்துவம் என்று சொல்கிறார்களே! உண்மையாகவே அது மாற்று மருத்துவம் தானா?

சிவராமன் , பர்வீன் சுல்தானா
சிவராமன் , பர்வீன் சுல்தானா

இடைக்காலத்தில் தான் இப்படி ஒன்றை சொல்ல ஆரம்பித்தினர்.அதற்கு முன்னெல்லாம் அந்தந்த நாட்டின் மரபு வழி மருத்துவம் தான் முதன்மை மருத்துவமாக இருந்தது. சீனாவில் சீன மருத்துவம், ஜப்பானிய கம்போ மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொரு நாட்டிலும் அவரவருக்கு ஏற்ற காலச்சூழல்,அனுபவங்கள், வாழ்வியல் என அவர்களின் வாழ்வியலுக்கு ஏற்ற மருத்துவம் தான் முதன்மை மருத்துவமான இருந்தது. 17ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நவீன அறிவியலின் தாக்கங்களால் மருத்துவர்கள் இதிலிருந்து நவீன உத்திகளை எடுத்துக்கொண்டனர். மற்றும் காமன்வெல்த் நாடுகள் மற்றும் பிற‌ நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் அவர்களின் ஆங்கில மருத்துவமும் அந்தந்த நாடுகளில் பின்பற்றப்பட்டது. இதன்பின் தான் அந்தந்த நாடுகளின் மரபு வழி மருத்துவத்தை மாற்று மருத்துவம் என்று கூற ஆரம்பித்தனர். உண்மையில் பார்த்தால் நவீன மருத்துவம் தான் மாற்று மருத்துவம். ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த மரபு வழி மருத்துவம் தான் முதன்மை மருத்துவம்.

ஆங்கில மருத்துவத்துடன் ஒப்பிடும்போது சித்த மருத்துவம் என்பது பாடல்களில் மட்டும் பயன்படுத்த பட்ட நிரூபிக்கப்படாத ஒன்றாக இருப்பதால் மக்கள் தங்கள் வாழ்வுக்கு சித்த மருத்துவத்தை ஏற்க மறுக்கின்றனர் என்னும் கருத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

``பிரசவகால மரணம் 99.9% குறைக்கப்பட்டுள்ளது; காரணம் இதுதான்!" - மருத்துவர் கு.சிவராமன்

சித்த மருத்துவத்தின் உண்மைத் தன்மை என்பது அதன் மறுஉருவாக்கம் என்பார்கள். ஒருமுறை பயன்படுத்தப்பட்டால் அது அடுத்த முறையும் பயன்படுத்தலாம் என்பது ஆங்கில மருத்துவத்தில் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கிறது. இந்த மருந்தை இந்த அளவில் கொடுத்தால் இந்த நோயை நீக்கும் சில பக்க விளைவுகளையும் இது கொடுக்கும் என்பது ஆங்கில மருத்துவம். இது மாதிரியாக இல்லாததால் சித்த மருத்துவம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதது என்பர். சித்த மருத்துவம் என்பது அனுபவ முறையில் வளர்ந்தது. அண்மையில் கபசுரக் குடிநீரை நாங்கள் அரசுக்கு பரிந்துரைத்போது அவ்வளவு எதிர்ப்புகள். கபசுரக் குடிநீரால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை அதனால் ஒரு பரீட்சார்த்த முறையில் தான் இதை பரிந்துரைத்தோம். நம் மண்ணின் மருத்துவத்தை ஏற்க அவ்வளவு யோசித்தனர். வேறு வழியின்றிதான் இதற்கு ஒப்புதல் கொடுத்தனர். இன்று பல ஆய்வுகள் கபசுரக் குடிநீரால் பல நன்மைகள் மற்றும் நோயை மேலாண்மை செய்வதில் பயனளிக்கிறது என்கிறது. இப்படி நம்ம மருத்துவ முறையை நாம் இரண்டாம் மனநிலை கொண்டு பார்ப்பதை தவிர்த்து நம் மருத்துவத்தை நம் வாழ்வியலுக்கு ஏற்ற மருத்துவத்தை நாம் தான் வளர்க்க வேண்டும்.

இப்படி சித்த மருத்துவத்தை இரண்டாம் மனநிலை கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்லும் நீங்களே சமீபகாலமாக அல்லோபதி மருத்துவத்தை ஆதரிப்பதாக தகவல்கள் வெளியாகிறதே அது உண்மையா?

நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் நான் அல்லோபதி மருத்துவத்தை எதிர்ப்பவன் அல்ல. நான் அல்லோபதி மருத்துவத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

அல்லோபதி மருத்துவம் இல்லாமல் இன்று பல நோய்கள் நீங்கியிருக்க முடியாது, பல மரணங்கள் மேற்கத்திய மருத்துவத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக நம் நாட்டில் சுதந்திரம் அடைந்தபோது பிரசவகால மரணங்கள் நிறையவே நிகழ்ந்தது. ஆனால், இன்று பிரசவகால மரணம் என்பது 99.9%குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மேற்கத்திய மருத்துவம் தான். அதுபோல இன்று குழந்தை இறப்பு விகிதத்தில் கூட நம் நாடு மிகவும் முன்னேறி இருக்கிறது. எத்தனையோ நோய்களில் அது தீவிர நிலையில் இருந்து விடுபடுவதற்கும் மரணங்களை தவிர்ப்பதற்கும் இந்த மேற்கத்திய மருத்துவம் தான் உதவி செய்கிறது. அதனால் நான் மேற்கத்திய மருத்துவம் என்பதை முழுமையாகவே மதிக்கின்றேன்.

ஆனால் என்றும் நம் சித்த மருத்துவத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்...