Published:Updated:

பத்தே நிமிடத்தில் பரிசோதனை செய்யும் கருவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அசரவைத்த 
அனூப் தெக்கே வீட்டில் குழு
அசரவைத்த அனூப் தெக்கே வீட்டில் குழு

அசரவைத்த அனூப் தெக்கே வீட்டில் குழு

பிரீமியம் ஸ்டோரி
‘கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டுமென்றால் பரிசோதனை களை அதிகரிக்க வேண்டும்’ என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய சிறியளவிலான கருவியைக் கண்டுபிடித்துள்ளது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ‘ஸ்ரீசித்திரை திருநாள் இன்ஸ்டிட்யூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சென்டர்’.
அசரவைத்த 
அனூப் தெக்கே வீட்டில்
அசரவைத்த அனூப் தெக்கே வீட்டில்

‘ஸ்ரீசித்திரை திருநாள் இன்ஸ்டிட்யூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சென்டரின் பயோ மெடிக்கல் டெக்னாலஜி பிரிவின் மூத்த விஞ்ஞானி டாக்டர் அனூப் தெக்கே வீட்டில் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ள இந்தக் கருவிக்கு, `Chitra GeneLAMP-N’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த விஞ்ஞானி அனூப் தெக்கே வீட்டிலிடம் பேசினோம், ‘‘டி.பி நோயைக் கண்டறிய பி.சி.ஆர் கிட்தான் பயன்படுத்தப்படுகிறது. அது விலை அதிகம் என்பதால், அதற்கு மாற்றாக சிறிய கிட்டைக் கண்டுபிடிக்க கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தோம். ஒருவழியாக அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்தோம். ஆம்! அந்தக் கருவியை உருவாக்கிவிட்டோம். உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர். கடந்த மார்ச் மாதம் மீட்டிங் நடத்தி தேசிய அளவில் பல இடங்களில் எங்கள் கிட்டை வைத்து சோதனை செய்ய திட்டமிட்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, எங்கள் திட்டம் நிறைவேறாமல்போனது.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பரிசோதனையும் பி.சி.ஆர் மூலமே செய்யப்பட்டது. பி.சி.ஆர் பரிசோதனைக்கான நேரமும் செலவும் அதிகமாக இருந்ததால், குறைந்த அளவிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில்தான், நாங்கள் உருவாக்கி வைத்திருந்த பி.சி.ஆருக்கு இணையான ஒரு மெஷினை கொரோனா சோதனைக்காகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதா என ஆராய்ந்தோம். கொரோனாவின் ஜீன்களை சோதனை செய்தபோது எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கொரோனாவுக்கு நிறைய ஜீன்கள் உண்டு. அதில் ‘என்’ ஜீனை ஆய்வுசெய்தால் நாங்கள் தயாரித்துள்ள `Chitra GeneLAMP-N’ கருவி மூலம் கொரோனாவை நூறு சதவிகிதம் கண்டுபிடித்துவிடலாம் என்பதை உணர்ந்தோம்.

அசரவைத்த 
அனூப் தெக்கே வீட்டில் குழு
அசரவைத்த அனூப் தெக்கே வீட்டில் குழு

இதற்காக 15 நாள்கள் தீவிர ஆராய்ச்சி நடத்தியதில் நல்ல ரிசல்ட் கிடைத்தது. பிறகு ஆலப்புழாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜிக்குச் சென்று சோதனை மேற்கொண்டோம். பி.சி.ஆர் கிட்டின் சோதனை ரிசல்ட்டும் நாங்கள் கண்டுபிடித்த `Chitra GeneLAMP-N’ கருவியின் ரிசல்ட்டும் ஒன்றுபோல துல்லியமாக இருந்தன. எங்கள் கண்டுபிடிப்பு கிராமப்புற மக்களுக்கு அதிகம் பயன்படும் என்பதால் மகிழ்ச்சியடைந்தோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து நாங்கள் உருவாக்கிய `Chitra GeneLAMP-N’ தொழில்நுட்பத்தை, எர்ணாகுளத்தில் உள்ள அகப்பே டைக்னோஸ்டிக்ஸ் (Agappe diagnostigs) நிறுவனத்தாரிடம் வழங்கி பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கும்படி கூறினோம். அவர்கள் முதற்கட்டமாக ஆறு கருவிகளைத் தயாரித்துத் தந்தார்கள். அவற்றை வைத்துதான் கொரோனாவைக் கண்டுபிடிக்கும் ஆய்வை வெற்றிகரமாக முடித்தோம். இன்னும் இருபது நாள்களில் முப்பது கருவிகள் தயாரித்துத் தரலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் 1,500 பரிசோதனைக் கருவிகள் தயாரித்து வழங்கலாம் எனக் கூறியுள்ளனர்.

பத்தே நிமிடத்தில் பரிசோதனை செய்யும் கருவி!

இப்போது இருக்கும் கருவிகளை மும்பை, தமிழ்நாடு போன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், ` Chitra GeneLAMP-N’ பரிசோதனைக்கருவி குறித்து பதிவிட்டுள்ளார். `எங்களுக்கு இந்த மெஷின் வேண்டும்' என அஸ்ஸாம் ஹெல்த் மினிஸ்டர் போனில் தொடர்புகொண்டு பேசினார். நேவியிலிருந்தும் ஆர்மியிலிருந்தும் தொடர்புகொண்டுள்ளனர். இந்தக் கருவியைக் கண்டுபிடிப்பதற்காக பிஹெச்.டி மாணவர்களான அமல் வில்சன், ஸ்வாதி நாயர், ரெஷிதா, அஞ்சனா ஆகியோர் இரவு பகலாக வேலைபார்த்தனர். இரவு 12 மணிக்குக்கூட என்னை அழைத்து கருவிகள் குறித்த தகவல்களை அப்டேட் செய்வார்கள். அவர்கள் தூக்கத்தை மறந்து ஆர்வமாகப் பணியாற்றியது என்னை ஆச்சர்யப்படவைத்தது’’ என்று நெகிழ்கிறார்.

கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் உங்களுடைய ஆராய்ச்சி மிகமிக முக்கியமானது. `பிக் சல்யூட்’ சார்!

என்ன சிறப்பு?

உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள ` Chitra GeneLAMP-N’, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ‘பி.சி.ஆர் கருவிக்கும் `Chitra GeneLAMP-N’ கிட்டுக்கும் என்ன வித்தியாசம்... அனூப் தெக்கே வீட்டிலிடம் கேட்டோம்...

* பி.சி.ஆர் கிட் வாங்க, பதினைந்து லட்சம் ரூபாய் முதல் நாற்பது லட்சம் ரூபாய் வரை செலவாகும். ` Chitra GeneLAMP-N’ கிட்டின் விலை இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய் மட்டுமே.

* பி.சி.ஆர் கிட் பெரிதாக இருப்பதால் அதை வைப்பதற்கு என தனி அறை வேண்டும். டெம்பரேச்சரில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், ரிசல்ட்டில் பிரச்னை ஏற்பட்டுவிடும். ஆகையால், பி.சி.ஆர் கருவி வைக்கப்படும் அறை குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்னை ` Chitra GeneLAMP-N’ கருவியில் இல்லை. இந்தக் கருவியை லேப்டாப் போன்று கையில் எடுத்துச் செல்லலாம். ஏ.சி இல்லாத சாதாரண இடத்தில் வைத்தும் பயன்படுத்தலாம்.

* பி.சி.ஆர் கருவியை ஆபரேட் செய்தற்கு பிரத்யேக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், `Chitra GeneLAMP-N’ கிட்டை சாதாரண லேப் டெக்னீஷியன்களே ஆபரேட் செய்யலாம்.

* `Chitra GeneLAMP-N’ கிட்டில் ஒரே சமயத்தில் 30 சாம்பிள்களை பரிசோதனை செய்யலாம். பத்து நிமிடத்தில் சோதனை முடிந்துவிடும். உடனடியாக மேலும் 30 சாம்பிள்களை பரிசோதனை செய்யலாம். பி.சி.ஆர் கிட்டில் ஒரே நேரத்தில் 80 சாம்பிள்களை சோதனை செய்யலாம் என்றாலும், சோதனைக்கு மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகுதான் அடுத்த சாம்பிள்கள் வைக்க முடியும். கொரோனாவைப் பொறுத்தவரை உடனடியாக ரிசல்ட் தேவைப்படுவதால் `Chitra GeneLAMP-N’ மிகவும் உபயோகமாக இருக்கும்.

* பி.சி.ஆர் கருவியின் அனைத்து பாகங்களும் வெளிநாடுகளிலிருந்து வருகின்றன. இந்தச் சமயத்தில் பி.சி.ஆர் கருவி வெளிநாட்டினருக்கும் தேவைப்படுவதால், அவர்கள் நமக்கு அனுப்புவதில்லை. `Chitra GeneLAMP-N’ கருவிக்கான அனைத்து பாகங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

* பி.சி.ஆர் பரிசோதனையைப் பொறுத்தளவில் அந்தக் கருவி இருக்கும் இடத்துக்கு சாம்பிள்களை எடுத்துச் செல்ல வேண்டும். சாம்பிள்களை கவனமாகக் கையாள வேண்டும். சாம்பிள்கள் முறையாகக் கையாளப்படவில்லையெனில் தவறான ரிசல்ட் வரலாம். `Chitra GeneLAMP-N’ கிட்டில் இந்தப் பிரச்னையும் இல்லை. இந்த கிட்டை எங்கு வேண்டுமானாலும் கொண்டுசென்று உபயோகிக்கலாம் என்பதால் (சாம்பிள் எடுக்கும் பகுதிக்கே கொண்டுசென்று பயன்படுத்தலாம்) துல்லியமான ரிசல்ட் கிடைக்கும்.

* பி.சி.ஆர் சோதனைக்கு 2,500 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை செலவு ஆகும். ` Chitra GeneLAMP-N’ சோதனைக்கு 1,000 ரூபாய்க்குள்தான் செலவாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு