Published:Updated:

அமெரிக்கா மிரட்டல்... உள்ளூரில் மாத்திரை இருக்கிறதா?

ஹைட்ராக்சிக்ளோரோகுயின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹைட்ராக்சிக்ளோரோகுயின்

மார்ச் 21-ம் தேதியே இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது.

ஆத்தாளுக்கு சோறு போடாதவன் அன்னச்சத்திரம் வெச்சானாம்’ என, கிராமப்புறங்களில் பழமொழி சொல்வார்கள். ஹைட்ராக்சிக்ளோரோகுயின் விவகாரத்தில் மத்திய அரசும் இதுபோல்தான் நடந்துகொள்வதாக ஆதங்கம் எழுந்துள்ளது.

கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சியாக ஹைட்ராக்சி க்ளோரோகுயின் பயன்படுத்தலாம் என்று அரை மனதுடன் அலோபதி மருத்துவ உலகம் முடிவுக்கு வந்ததுமே, அந்த மாத்திரைக்கு உலகம் முழுவதும் ஏக டிமாண்ட். இந்தியாவை மிரட்டி இந்த மாத்திரைக்கான ஏற்றுமதித் தடையை நீக்கவைத்தது அமெரிக்கா.

அமெரிக்கா மிரட்டல்... உள்ளூரில் மாத்திரை இருக்கிறதா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘இந்த மாத்திரை தாராளமாக இருப்பு உள்ளது. ஏற்றுமதி செய்தாலும் இங்கு தட்டுப்பாடு வராது’ என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்தது. ஆனால், ‘கொரோனா பாதிப்பு இன்னும் மூன்றாம் கட்டத்தை எட்டவில்லை’ என்று அரசு தெரிவித்துள்ள நிலையிலேயே, இந்த மாத்திரைக்கான தட்டுப்பாடு அதிகமாகியிருக்கிறது.

மலேரியா, நிமோனியா, நுரையீரல் நீர்த்தேக்கம், இதய தசை அழற்சி, சிறுநீரக அழற்சி, எலும்பு மற்றும் தசை அழற்சி நோய், மூட்டுவலி ஆகிய பாதிப்புகள்கொண்டவர்கள் வேறு சில மாத்திரைகளுடன் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரையையும் எடுத்துவந்த நிலையில், தற்போது ஹைராக்சிக்ளோரோகுயின் மாத்திரை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உதாரணமாக திருவாரூரைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மனைவி, தினமும் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய கலைச்செல்வன், “மார்ச் 21-ம் தேதியே இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. திருவாரூரில் உள்ள மெடிக்கல் ஷாப்கள், மத்திய அரசின் பிரதமர் மக்கள் மருந்தகம் என எல்லா இடங்களிலும் ‘ஸ்டாக் இல்லை’ என்றே சொல்கின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை’’ என்றார்.

தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ள தனியார் மெடிக்கல் ஷாப்களில் இதுகுறித்து விசாரித்தபோது ‘ஸ்டாக் இல்லை’ என்றே பதில் வந்தது. பிரதமர் மக்கள் மருந்தகத்தில் விசாரித்தோம். “இங்கு மட்டுமே மாதம் 500 அட்டைகள் வரை ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகள் விற்பனையாகும். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாக எங்களுக்கே மருந்து வருவதில்லை” என்றார்கள்.

திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜமூர்த்தியிடம் பேசினோம். “திருவாரூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு இந்த மாத்திரை இருக்கிறது. மெடிக்கல் ஷாப்களில் இது கிடைக்காதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். மருத்துவரின் பிரிஸ்கிப்ஷன் சீட் இருந்தால், இங்கு வந்து மாத்திரை வாங்கிக்கொள்ளலாம்.” என்றார்.

அமெரிக்கா மிரட்டல்... உள்ளூரில் மாத்திரை இருக்கிறதா?

இந்தத் தகவலை திருவாரூர் கலைச்செல்வனிடம் தெரிவித்தோம். அவர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். அதேசமயம் இந்த மாத்திரை எல்லா மெடிக்கல் ஷாப்களிலும் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை திரும்பினால்தான், இது தேவைப்படக்கூடிய அனைத்து நோயாளிகளுக்கும் பிரச்னை தீரும்!