Published:Updated:

ஷர்மிகா விதிகளை மீறியிருந்தால், மருத்துவராக செயல்படுவாரா - விசாரணை பற்றி கணேஷ் ஐ.ஏ.எஸ் சொல்வதென்ன?

கணேஷ் ஐ.ஏ.எஸ்

ஷர்மிகா 'இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது' என்றெல்லாம் தவறாக பேசக்கூடாது. இதனால்தான், இந்த நடவடிக்கை. எல்லாம் தெரிந்ததுபோல்..." - இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் பேட்டி

ஷர்மிகா விதிகளை மீறியிருந்தால், மருத்துவராக செயல்படுவாரா - விசாரணை பற்றி கணேஷ் ஐ.ஏ.எஸ் சொல்வதென்ன?

ஷர்மிகா 'இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது' என்றெல்லாம் தவறாக பேசக்கூடாது. இதனால்தான், இந்த நடவடிக்கை. எல்லாம் தெரிந்ததுபோல்..." - இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் பேட்டி

Published:Updated:
கணேஷ் ஐ.ஏ.எஸ்
"மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசி மக்களைக் குழப்பிவரும் சித்த மருத்துவர் ஷர்மிகாமீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணை இயக்குனர் பார்த்திபன். இந்நிலையில், டாக்டர் ஷர்மிகாவுக்கு விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், டாக்டர் ஷர்மிகா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவரது மருத்துவமனை மீது என்ன நடவடிக்கை? அவர் கைது செய்யப்படுவாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் வைரலாகிவரும் சூழலில் இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசினேன்,

ஷர்மிகா
ஷர்மிகா

"மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக யார் தவறான தகவல்களைப் பரப்பினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யார் யார் எந்தெந்த மருத்துவப்படிப்புகளை படிக்கிறார்களோ அவரவர்களுக்குண்டான சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும்தான் வழங்கவேண்டும். எல்லாம் தெரிந்ததுபோல் கருத்துகளை பரப்பி மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது. அப்படி, தவறான தவல்களை பரப்புவதால் அதை பின்பற்றும் பொதுமக்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா அண்ட் நேச்சுரோபதி ஆகிய ஐந்து விதமான மருத்துவ முறைகளை கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும்தான் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட மருத்துவர்கள் அந்தந்த கவுன்சில்களில் பதிவு செய்கிறார்கள். அதன், சட்டத்திட்டத்திற்கு உட்பட்டுத்தான் பதிவு செய்த மருத்துவர்கள் பேசமுடியும்.

சித்த மருத்துவர் ஷர்மிகா சரண்
சித்த மருத்துவர் ஷர்மிகா சரண்

அதைவிடுத்து, 'நான் இந்த நோயைக் குணப்படுத்துவேன், அந்த நோயைக் குணப்படுத்துவேன்', 'இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது' என்றெல்லாம் தவறாக பேசக்கூடாது. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளதை, வேறு மாதிரியாகவும் சித்தரிக்கக்கூடாது. சித்த மருத்துவர் ஷர்மிகா மக்களை தவறாக வழிநடத்துவதால்தான், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்காக, சித்த மருத்துவர் உள்ளடக்கிய மருத்துவ வல்லூநர்கள் கொண்ட குழுவையும் நியமித்துள்ளோம். அக்குழுவினர் சித்த மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிராக ஷர்மிகா என்னென்ன பேசியுள்ளார்? விதிமீறல் செய்துள்ளாரா? என்பதையெல்லாம் ஆராய்ந்து, ஷர்மிகாவின் விளக்கத்தையும் கேட்டு எனக்கு ரிப்போர்ட் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை என்பது குறித்து முடிவு செய்வோம்" என்பவரிடம்...

"டாக்டர் ஷர்மிகா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்?" என்று கேட்டோம்,

ஷர்மிகா விதிகளை மீறியிருந்தால், மருத்துவராக செயல்படுவாரா - விசாரணை பற்றி கணேஷ் ஐ.ஏ.எஸ் சொல்வதென்ன?

"மருத்துவ வல்லுநர் குழுவின் ரிப்போர்ட் வந்தபிறகு, ஷர்மிகா கவுன்சிலின் விதிகளை மீறியுள்ளாரா? என்பதை ஆராய்ந்து தற்காலிகமாக அவரது பதிவு எண்ணைக் கேன்சல் செய்வோம். அது ஆறு மாதமா, ஒரு வருடமா என்பதெல்லாம் வல்லுநர் குழு முடிவு செய்யும்" என்றார். அதாவது, டாக்டர் ஷர்மிகாவின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டால், அந்த காலக்கட்டத்தில் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு சிகிச்சையோ ஆலோசனையோ வழங்கமுடியாது.