Published:Updated:

கருத்தரிப்பு சிகிச்சைகள்... கண்டுகொள்ளாத அரசு மருத்துவமனைகள்... கல்லாகட்டும் தனியார் மையங்கள்!

கல்லாகட்டும் 
தனியார் மையங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கல்லாகட்டும் தனியார் மையங்கள்

அந்தத் தம்பதிக்குச் சொந்த ஊர் தர்மபுரி. திருமணமாகிப் பல வருடங்களாகக் குழந்தை இல்லை. குழந்தைகுறித்த கேள்விகளால் துளைத்தெடுக்கப் பட்டனர். குடும்பத்தினரின் வசவுகளையும் அந்தப் பெண் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கருத்தரிப்பு சிகிச்சைகள்... கண்டுகொள்ளாத அரசு மருத்துவமனைகள்... கல்லாகட்டும் தனியார் மையங்கள்!

அந்தத் தம்பதிக்குச் சொந்த ஊர் தர்மபுரி. திருமணமாகிப் பல வருடங்களாகக் குழந்தை இல்லை. குழந்தைகுறித்த கேள்விகளால் துளைத்தெடுக்கப் பட்டனர். குடும்பத்தினரின் வசவுகளையும் அந்தப் பெண் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

Published:Updated:
கல்லாகட்டும் 
தனியார் மையங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கல்லாகட்டும் தனியார் மையங்கள்

ஒருகட்டத்துக்கு மேல் அவர்களால் தாங்க முடியவில்லை. ஈரோட்டில் உள்ள ஒரு செயற்கைக் கருத்தரிப்பு மையத்தை அணுகினர். ‘சில லட்சங்கள் செலவழித்தால் போதும்... குழந்தைக்கு நாங்கள் கியாரன்டி’ என்றனர் கருத்தரிப்பு மையத்தினர். ஈரோட்டிலேயே வாடகைக்கு வீடு எடுத்து ஓராண்டு தங்கினார்கள். சிகிச்சைகள் தொடர்ந்தன. 12 லட்சம் ரூபாய்க்குமேல் செலவானதுதான் மிச்சம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்து, புதுச்சேரியில் உள்ள ஒரு செயற்கைக் கருத்தரிப்பு மையத்தை அணுகினர். அங்கு நான்கைந்து லட்சம் ரூபாய் காலியானது. பலன் இல்லை. இப்போது அந்தக் குடும்பம் கடுமையான மன உளைச்சலில் தவிக்கிறது. இப்படி நிறைய பேர் குழந்தைக்காகப் பணத்தையும் இழந்து, உடல்ரீதியான பாதிப்பையும் சுமந்து திரிகிறார்கள். பெருநகரங்களில் வீதிக்கு இரண்டு தனியார் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் முளைத்துவிட்டன. எல்லா கருத்தரிப்பு மையங்களும் நேர்மையுடன் செயல்படுவது இல்லை. எப்படியாவது குழந்தை வேண்டும் என்கிற தவிப்பில் வருபவர்களின் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு பணம் பறிப்பதிலேயே பல மையங்கள் குறியாக இருக்கின்றன. செயற்கை கருத்தரிப்பு என்றாலே தனியார் மையங்கள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. ஏன் அரசு மருத்துவமனையில் செயற்கைக் கருத்தரிப்பு இல்லையா?

கருத்தரிப்பு சிகிச்சைகள்... கண்டுகொள்ளாத
அரசு மருத்துவமனைகள்...
கல்லாகட்டும் 
தனியார் மையங்கள்!

மகப்பேறு மருத்துவரும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளருமான மருத்துவர் சாந்தியிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘அரசு மருத்துவமனைகளில் தற்போதைக்கு குழந்தையின்மை சிகிச்சை யாக லேப்ராஸ்கோபி, ஃபலோபியன் ட்யூப் கரெக்‌ஷன், விந்தணு உட்செலுத்தும் முறை மற்றும் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்தக் கருத்தரிப்பு சிகிச்சைகள் பலன் தராமல் போனால் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைகளான ஐ.வி.எஃப், ஐ.சி.எஸ்.ஐ உள்ளிட்ட சில சிகிச்சைகள் தேவைப்படும். இந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. மலட்டுத்தன்மை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகளை ஆரோக்கியப் பிரச்னையாக அரசு பார்ப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் ஆயிரக்கணக்கான தம்பதிகளைப் பாதிக்கும் மிகத்தீவிரமான ஒரு பிரச்னையை அரசு இவ்வளவு மெத்தனமாகக் கையாளக்கூடாது’’ என்றார்.

கல்லாகட்டும் 
தனியார் மையங்கள்
கல்லாகட்டும் தனியார் மையங்கள்

‘Ernst and Young report’ என்ற தரவுத்தளத்தின்படி, இந்திய அளவில் தீவிர மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் 2.2 கோடி முதல் 3.3 கோடி பேர் வரை இருக்கலாம் என்று தெரியவருகிறது. இதுகுறித்த முறையான தரவுகள்கூட அரசு தரப்பில் இல்லை. ‘இந்த வருட இறுதிக்குள் கோவை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் செயற்கைக் கருத்தரிப்புக்கான சிகிச்சைகள் தொடங்கப்படும்’ என்று 2019-ன் தொடக்கத்தில் சுகாதாரத்துறை அறிவித்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான மகப்பேறு மருத்துவமனைகளான எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில்கூட செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைகள் இல்லை. இதுகுறித்து முறையே அந்த மருத்துவமனைகளின் டீன்களான ஷோபா மற்றும் வசந்தாமணியிடம் கேட்டால், ‘‘தேவையான நிதி கிடைக்கப் பெறவில்லை. நிதி வந்ததும் சிகிச்சைகள் தொடங்கப்படும்’’ என்றார்கள்.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் சார்பாக பேசுபவர்களோ, “எங்கள் தொழிலில் சிலர் ஏமாற்றச் செய்யலாம். ஆனால், அரசு அங்கீகாரம் பெற்று முறையான மருத்துவர்களைக்கொண்டு செயல்படும் பல மையங்கள் நேர்மையாகத்தான் செயல்படுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு நிவாரணமே கிடையாது. ஆனால், இன்று அப்படி இல்லை. பத்து பேரில் குறைந்தது ஆறு பேருக்கு பிரச்னையைச் சரிசெய்து குழந்தை பெற உதவுகிறோம்” என்றார்கள்.

செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை அரசு புறக்கணிப்பது, தனியார் கருத்தரிப்பு மையங்கள் கல்லா கட்டவே உதவுகிறது!

மலட்டுத்தன்மை - இன்ஃபோகிராபிக்ஸ்
மலட்டுத்தன்மை - இன்ஃபோகிராபிக்ஸ்

என்ன தீர்வு?

‘அசிஸ்டெட் ரீபுரொடக்டிவ் டெக்னாலஜி (Assisted reproductive technology) எனப்படும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை முறைப்படுத்த இயற்றப்பட்ட சட்டம், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை’ என்கின்றனர் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் சாந்தி, ‘‘கருத்தரிப்பைப் பொறுத்தவரை, அதன் சில அம்சங்களை மட்டும் சிறு சிறு பகுதிகளாக எடுத்து, அவற்றைத் தனிச்சட்டங்களாகச் சமீபத்தில் அறிவித்திருந்தது குடும்ப நல அமைச்சகம். உதாரணத்துக்கு, வாடகைத்தாய் சட்டத்தைச் சொல்லலாம். செயற்கை கருத்தரிப்புக்கான சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போதுதான் அதிலுள்ள சாதக பாதகங்களைச் சொல்ல முடியும். தற்போதுள்ள சூழலில், செயற்கை கருத்தரிப்பின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்குச் சம்பந்தப்பட்ட கருத்தரிப்பு மையங்களின்மீது சிவில் வழக்குத் தொடரலாம். உயிர்ச்சேதம் ஏற்பட்டால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யலாம்’’ என்றார்.