ஒரு கோடியைத் தாண்டிவிட்டது சென்னை மாநகரின் மக்கள்தொகை. மக்கள் அடர்த்தியும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. வாகன எண்ணிக்கையும் பெருகிக்கொண்டேபோகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல், தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பல பிரச்னைகளை சென்னை சந்தித்துவருகிறது. இந்த மக்கள் அடர்த்தியால் இப்போது உயிருக்கே பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், சென்னை மாநகரில் தினமும் எகிறிக்கொண்டிருக் கிறது எண்ணிக்கை. ஏப்ரல் 30-ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா தொற்று உள்ளவர் களின எண்ணிக்கை 800-ஐ தாண்டி ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய ஆறு மண்டலங்களில் மட்டுமே 65 சதவிகிதம் பாதிப்பு உள்ளது. சென்னையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ள 336 பகுதிகளில் இந்த ஆறு மண்டலங்களில்தான் அதிக பகுதிகள் உள்ளன.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முக்கியமான பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல்துறை இரண்டுக்குமே அதிகம் இருக்கிறது. அந்த வகையில் இதற்கான பணிகளைச் செய்யும் பொறுப்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் இருக்கின்றனர். சுகாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், காவல்துறைக்கு நேரடி தொடர்பு இல்லை. மாநகராட்சியின் பணிகளுக்கு உதவுவதுதான் போலீஸ் வேலை. இந்த இரண்டு அதிகாரிகளையும் நேரில் அழைத்துப் பேசிய முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் இருவரும், ஆணையர்களின் செயல்பாடுகளில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கோட்டை வட்டாரத்தில் தகவல் பரவியிருக்கிறது.

மக்கள் அடர்த்தியான இந்தப் பகுதிகளிலும் கடைகளை 1 மணிக்குள் மூடவேண்டும் என்ற அறிவிப்பால்தான், மக்கள் பதற்றமாகி சமூக இடைவெளியின்றி பொருள்களை வாங்க முட்டிமோதுகின்றனர். ஏற்கெனவே இந்த நிலை இருந்த இந்தப் பகுதிகளில், முழு ஊரடங்கு அறிவிப்பு மேலும் பதற்றத்தை உண்டாக்கிவிட்டது. முழு ஊரடங்குக்கு முந்தைய தினம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கடைகளில் குவிய, சமூக இடைவெளி கேலிக்கூத்தானது. ஊரடங்கு உருக்குலைந்ததுதான் இப்போது பிரச்னையைப் பெரிதாக்கியிருப்பதாகத் தெரிகிறது.

‘இதையெல்லாம் முதல்வர் எடப்பாடியிடம் உரியமுறையில் இங்கு உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எடுத்துச் சொல்லவில்லை’ என்பதே சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகவுள்ளது. ‘கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குள் எழுந்துள்ள ஈகோ பிரச்னையால் பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை. கொரோனா தொற்று அதிகமானதற்கு காரணமே இதுதான்’ என்பது இவர்களின் வாதம்.

உதாரணத்துக்கு, கோயம்பேடு மார்க்கெட் ஏரியாவை தற்காலிகமாக வேறு ஏரியாவுக்கு மாற்றியிருந்தால், சமூகப் பரவல் அதிகமாகி யிருக்காது. ஆனால், அதற்கான வேலைகள் ஆமை வேகத்தில்தான் நடந்தன. அதற்குப் பிறகே, சென்னை மாநகரில் கொரோனா தடுப்புப் பணிகளை வேகப்படுத்தும் பொருட்டு, சென்னை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்தது அரசு. அவர்களுடைய பேச்சுவார்த்தையை அடுத்துதான், கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக இடம் மாற்றும் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. அங்கு இருந்த 1,600 சில்லறை வியாபாரிகளை, சென்னைக்குள் 240 இடங்களில் பொருள்களை விற்றுக்கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறது அந்தக் குழு.

இந்தப் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துடன் (சி.எம்.டி.ஏ) இணைந்து மாநகராட்சி நிர்வாகம் முன்பே செய்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ‘‘சென்னை மாவட்ட ஆட்சியருக்கு பெரிதாக அதிகாரம் இல்லை. சென்னை மாநகராட்சி ஆணையருக்கே அதிகாரம் அதிகம் இருக்கிறது. அதேபோல், தமிழக சுகாதாரத் துறை செயலாளரின் பொறுப்பில் மாநிலத்தின் சுகாதாரம் இருந்தாலும், தலைநகரான சென்னையின் சுகாதாரத்தைக் காக்கும் பொறுப்பு மாநகராட்சி ஆணையருக்கே உண்டு. அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகத்தை கவனிப்பது சி.எம்.டி.ஏ-தான். அதை நிர்வகிக்க உறுப்பினர் செயலர் பதவியில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கிறார். கொரோனா பாதிப்பு நேரத்தில் இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயலாற்றியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் கோட்டைவிட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்றனர்.

சென்னையில் கிருமிநாசினி தெளிப்பது, மருந்து அடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த எடுப்பிலேயே வேகமாகச் செய்தது மாநகராட்சி நிர்வாகம். ஆனால், தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஏன் அதிகமாகிறது என்பதற்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றை தடுக்கத் தவறிவிட்டது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநராக இருப்பவர் கணேஷ் ஐ.ஏ.எஸ். இவர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே, மத்திய அரசின் சுகாதாரத் துறை அனுப்பிய உத்தரவை மேற்கோள்காட்டி கபசுர குடிநீர் கஷாய பாக்கெட்டுகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுத்தார். சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அவற்றை விநியோகிக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டும் அதற்கு சுகாதாரத் துறை மறுத்துவிட்டது. சென்னை மாநகராட்சியும் கைவிரித்துவிட்டது.

சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் 12 லட்சம் கபசுர குடிநீர் பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் ஹோமியோபதி மருத்துவர்கள். சென்னையில் விநியோகிக்காததை மத்திய குழுவினர் தமிழக அரசிடம் சுட்டிக்காட்டிய பிறகுதான், சென்னையில் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் இல்லாததால்தான் உரிய காலத்தில் இவை விநியோகிக்கப் படவில்லை என்பது விவரம் அறிந்த அதிகாரிகளின் அபிப்பிராயமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டிருப்பது சென்னை மாநகர மக்கள்தான்.

தண்டையார்பேட்டையில் சென்னை மாநகராட்சியின் தொற்றுநோய் மருத்துவமனை உள்ளது. அங்கே ஆய்வக வசதி இருந்தும் கொரோனா டெஸ்டிங் ஏன் நடத்தவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். ராயபுரம் மண்டலத்தை உள்ளடக்கிய துறைமுகம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான சேகர்பாபு நம்மிடம், ‘‘மார்ச் முதல் வாரத்திலேயே எங்கள் தலைவர் பலமுறை எச்சரித்தும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவேயில்லை. தென்மாவட்டத்துக்காரர் ஒருவர் கொரோனா பாதித்து இறந்துபோனார். அவர் உயிருடன் இருந்தவரையில், துறைமுகம் ஏரியாவில்தான் அதிகம் நடமாடியுள்ளார். அவர் இறந்த பிறகுதான் அவர் கொரோனாவில் இறந்தது கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகும் துறைமுகம் ஏரியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எதையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போது அங்கே கொரோனா தொற்று அதிகமாவதற்கு முழுக்க முழுக்க அதிகாரிகள்தான் காரணம்’’ என்றார்.

சென்னையில் கொரோனா டெஸ்ட் நடத்த தனியார் ஆய்வகங்கள் தவிர, அரசுத் தரப்பில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள ஆய்வகங்களில் சமீபத்தில்தான் டெஸ்டிங் ஆரம்பித்திருக்கிறார்கள். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் இன்னும் டெஸ்டிங் ஆய்வகம் முழுமையாகச் செயல்படவில்லை என்ற புகாரும் கிளம்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நோய்த்தொற்று சிகிச்சை மருத்துவர் ஒருவர் நம்மிடம், ‘‘சென்னை கிண்டியில் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் செயல்படுகிறது. இங்கு தினமும் 500 சாம்பிள்கள்தான் டெஸ்ட் செய்ய முடியும். ஆனால், அங்கே தினமும் சுமார் 2000 சாம்பிள்கள் டெஸ்ட் செய்கிறார்கள். சென்னையில் உள்ள ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவனைகளில் இருந்து தினமும் கணிசமான எண்ணிக்கையில் டெஸ்ட் செய்ய சாம்பிள்கள் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிவருகின்றனர். அத்துடன், ஆரம்பக்கட்ட சோதனை நடத்தாமல், சாம்பிளை எடுத்து அனுப்பிவிடுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை நெகட்டிவ் ரிசல்ட்தான் வருகிறது. இவற்றை முதலிலேயே ஸ்கிரீனிங் செய்திருந்தால், டெஸ்டிங் கருவிகளுக்கு ஆகும் செலவுகள், மனித உழைப்பு ஆகியவற்றை குறைக்கலாம்’’ என்றார்.

இப்படி அரசு மீதும் அதிகாரிகள் மீதும் புகார்கள் குவிகின்றன. நிலைமை சற்று மோசமாவது அறிந்து இப்போதுதான் அரசு விழித்துக்கொண்டு, கூடுதல் அதிகாரிகளைக் களமிறக்கியுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இல்லாதது குறித்து அதிகாரிகள் சொன்ன தகவலைக் கேட்ட முதல்வர், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உத்தரவிட்டிருக் கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் பணியில் மேலும் நூறு கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமாக உள்ள ஆறு மண்டலங்களிலும் வீடுதோறும் தொற்றைக் கண்டறிந்து பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

மறுபுறத்தில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மக்கள், வணிகர்கள், ஊர் சுற்றுவோர் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரி களுக்கு மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் ஏரியாவில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. தாமதமாக அரசு விழித்துக்கொண்டாலும் வேகமாகவே பணிகள் நடக்கின்றன.

ஆனால், இந்தத் தாமதத்துக்கு சென்னை மாநகர மக்கள் தரப்போகும் விலைதான் என்னவோ?