Published:Updated:

கொரோனாவைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்கள்!

கொரோனா வைரஸ்

வழிகாட்டும் சீனா

கொரோனாவைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்கள்!

வழிகாட்டும் சீனா

Published:Updated:
கொரோனா வைரஸ்
நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை ஆபத்துக்காலங் களில் எந்தளவுக்குப் பயன்படுத்த முடியும் என்பதை, சீனாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

கொரோனா பாதித்த முதல் நாளிலிருந்து செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் தொடங்கி ட்ரோன்கள் வரை ஏராளமான தொழில்நுட்பங்களை முழுவீச்சில் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்திவருகிறது சீனா.

ஒவ்வொரு தனிமனிதரின் உடல்நிலை குறித்த விவரங்களும் சீன அரசின் தகவல் தளத்தில் பதிவேற்றப்பட்டன. தொடுதலின் மூலம் நோய் பரவுகிறது என்பதால், மருத்துவமனைகளில் உணவு விநியோகத்திலிருந்து மருந்து விநியோகம் வரை ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. நோயைக் கண்டறிவதற்கான அடிப்படைச் செயல்பாடுகளைக் கூட ரோபோக்களே மேற்கொண்டன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘தெர்மல் கேமரா’ பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலமும் சீனாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ‘ஃபேஷியல் ரெகக்னிஷன்’ தொழில்நுட்பம் மூலமும் பொது இடங்களில் உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.

சீனாவில் செங்குடு நகர காவல்துறைக்கு ஸ்மார்ட் ஹெல்மெட்கள் வழங்கப்பட்டன. அதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள், ஐந்து மீட்டர் தூரத்துக்குள் நோயின் அறிகுறிகொண்ட அதிக உடல் வெப்பத்துடன் யாராவது இருந்தால் அலாரம் அடித்து எச்சரிக்கை செய்தன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மொபைல் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டது. நோய் தாக்கப்பட்டவர் அருகில் இருந்தால் இந்த மொபைல் செயலி எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. வருங்காலங்களில் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.

சீனாவின் வூஹானைவிட இத்தாலியின் ரோமைவிட பல மடங்கு மக்கள் அடர்த்தியாக வசிக்கும் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களைக்கொண்டது இந்தியா. ஆனால், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர்களோ, ‘யோகா செய்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்’ என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

‘‘பேண்டமிக் வியாதிகள் எனப்படும் உலகம் முழுவதும் பரவலாக ஏற்படும் ஒரு தொற்றுநோய் பரவினால், எந்த அரசாலும் போதிய அளவில் சிகிச்சையளிக்க முடியாது. இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளே இந்த விஷயத்தில் தவியாய்த் தவிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். ஆகவே, அரசு மட்டுமல்லாமல் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோயை முன்கூட்டியே தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்’’ என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் அமலோற்பவநாதன்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷைத் தொடர்புகொண்டு பேசியபோது, ‘‘பொது மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. தேவையற்ற வதந்திகளைப் பரப்பாமல் மக்கள் பொறுமை காக்க வேண்டும்’’ என்றார்.

நாம் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism