இன்னும் சில மாதங்களுக்கு தடுப்பூசி வர வாய்ப்பில்லை என்ற நிலையில், ‘கொரோனாவை குணப்படுத்தும் மருந்து எது?’ என்று உலகமே தேடுகிறது. ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வர அது மட்டுமே உதவும். இந்தச் சூழலில், நம்பிக்கை தரும் செய்தி வெள்ளை மாளிகையிலிருந்து வந்திருக்கிறது.

‘‘அற்புத நிவாரணம் தருகிறது’’ என்று ஹைட்ராக்சி க்ளோரோகுயின் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னதும், உலகெங்கும் அந்த மாத்திரைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது அந்த மருந்தின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. என்றாலும் டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் என கொரோனா தொற்றும் அபாயம் உள்ளவர்களுக்கு அதைத்தான் இந்தியாவில் கொடுக்கிறோம்.

இந்த நிலையில், ‘கொரோனா தாக்கியவர்களை சீக்கிரமே குணமடையச் செய்கிறது Remdesivir மருந்து’ என அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணர் அந்தோணி ஃபாஸி அறிவித்துள்ளார். 1,063 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில், நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதாம். உடலில் கொரோனா வைரஸ் பெருகுவதை இது தடுக்கிறது என்கிறார் அவர். எபோலா நோயை குணப்படுத்த கண்டறியப்பட்ட இந்த மருந்து, இப்போது அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட உள்ளது.

இப்போதைய சூழலில், உலகின் பல்வேறு நாடுகளில் சுமார் 150 வகையான மருந்துகளை வைத்து கொரோனாவை குணப்படுத்தும் ஆய்வுகள் நடந்துவருகின்றன. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் இந்தியாவில் கிடைக்கின்றன என்பது நமக்கு ஆறுதல் தரும் விஷயம்.

ஒரு மருந்தானது கொரோனாவிலிருந்து நோயாளியை மூன்று வழிகளில் மீட்க முடியும்.

1. கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் ஒருவரின் உடலில் நுழைந்த பிறகு அது பெருகாமல் தடுப்பது. கிட்டத்தட்ட கருத்தடை மருந்துபோல் செயல்பட்டு, வைரஸின் பெருக்கத்தை நிறுத்துவது.

2. இந்த வைரஸ் நம் உடலுக்குள் போய்விட்டாலும், உடல் செல்களின் உள்ளே அதை நுழையவிடாதபடி தடுப்பது.

3. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கி, வைரஸை வெற்றிகரமாக வீழ்த்த உதவுவது.

இந்த மூன்றில் ஏதாவது ஒரு வகையில் மருந்து முழுமையாக உதவினால் போதும், கொரோனா விலிருந்து மீள முடியும். ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளைக் குறைக்கும் மருந்துகள், ஒருவரை மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே குணமாக்கலாம். மருத்துவ மனைக்குப் போன ஒருவரை, வென்டிலேட்டர் பொருத்தும் அளவுக்கு மோசமாகாமல் தடுக்கலாம்.

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்தைப் பயன்படுத்துவது? இதைக் கண்டறிவதற்காக TFORD-Task Force on Repurposing of Drugs for COVID 19 என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு. ‘ஏற்கெனவே வேறு சிகிச்சைகளில் பயன்பாட்டில் உள்ள மருந்துகளில் எது கொரோனாவுக்கு சிறந்த மருந்து’ எனக் கண்டறிவது இந்தக் குழுவின் பணி. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரியான டாக்டர் பிரேம்நாத் தலைமையிலான இந்தக் குழு, 19 வகை மருந்துகளைப் பரிசீலித்தது. இந்த மருந்துகளின் பாதுகாப்பு, அறிவியல் ஆய்வுகள், எந்த அளவுக்கு இவை கிடைக்கின்றன, இந்தியாவில் உடனடியாக தயாரிக்கும் வசதி உள்ளதா போன்ற பல விஷயங்களைப் பரிசீலித்து ஒவ்வொரு மருந்துக்கும் மதிப்பெண் போட்டனர்.

இந்த ஆய்வில் இரண்டு மருந்துகள், அதிகபட்சமாக 73 மதிப்பெண் பெற்றுள்ளன. ‘இந்த இரண்டு மருந்துகளையும் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்’ என அரசுக்கு இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஒன்று, Tocilizumab. இரண்டு, Favipiravir.

இதில் Tocilizumab என்பது, கீல்வாத மூட்டுவலிக்குப் பயன்படும் மருந்து. இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்துவது தொடர்பாக 24 இடங்களில் நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வுகள் நடக்கின்றன. இவற்றில் சில ஆய்வுகள் நம்பிக்கையான முடிவுகளைத் தந்துள்ளன. பாரிஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில், மிக அபாயகரமான நிலைக்குப் போன கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தினர். மூச்சு விடவே சிரமப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிய நோயாளிகள், இந்த ஊசியைப் போட்டதும் ஆச்சர்யம் தரும்விதமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கி, கொரோனாவிலிருந்து மீட்கிறது இது.

Favipiravir மருந்து, ஜப்பானில் ஃப்ளூ சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது. இதை வைத்து 18 இடங்களில் ஆய்வு நடக்கிறது. நல்ல பலன் தருவதாக இரண்டு ஆய்வுகள் சொல்கின்றன. இது வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி நிவாரணம் தரும் மருந்து.

இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மருந்துகள்போலவே, நம்பிக்கை தரும் பல நல்ல தகவல்கள் உலகெங்கும் கிடைத்துள்ளன. அவை:

கொரோனா வைரஸ்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வுசெய்பவர், அமெரிக்காவின் நார்த் கரோலினா பல்கலைக்கழக நிபுணர் ரால்ஃப் பேரிக். தற்போது உலகை நடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸின் புரதத்தில் பலவீனமான ஒரு பகுதியை அவர் கண்டுபிடித்து விட்டார். ‘‘இந்த பலவீனமான பகுதியை ஒரு மருந்து தாக்கினால், அதன் பிறகு மனித உடலுக்குள் அந்த வைரஸ் பல மடங்காகப் பெருக முடியாமல் மடிந்துவிடும்’’ என்கிறார் இவர். ‘EIDD-2801 என்ற ஃப்ளூ ஜுரத்துக்கான மாத்திரை இதைச் செய்கிறது’ என அறிவித்துள்ளார் இவர்.

கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கும்போதுதான் ஒருவர் மரணமடையும் அபாயகரமான கட்டத்துக்குச் செல்கிறார். நுரையீரலுக்கு இது போவதைத் தடுக்க முடியுமா? இங்கிலாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு நடக்கிறது. சுவாசப் பிரச்னைகள் மற்றும் நுரையீரல் வைரஸ் தொற்று சிகிச்சைகளில் பயன்படும் Neumifil என்ற மருந்தை கொரோனாவுக்கும் சோதித்துப் பார்த்தார்கள். நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

இங்கிலாந்தில் சுமார் 5,000 கொரோனா நோயாளிகளை வைத்து மிகப்பெரிய பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இதில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மருந்து, Dexamethasone. நம்பிக்கை தரும் இந்த ஆய்வு இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மூன்று இடங்களில், வித்தியாசமான சோதனை ஒன்று நடைபெறுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலைமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, தொழுநோய் மருந்தான Mw கொடுக்கிறார்கள். ‘இது, மரணத்தைத் தடுக்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிளாஸ்மா சிகிச்சை, இப்போது பிரபலமாகி வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர் களிடமிருந்து ரத்தம் பெற்று, அவர்களின் பிளாஸ்மாவிலிருந்து எதிர்ப்பு அணுக்களைப் பிரித்து எடுத்து, நோயாளிகளுக்குச் செலுத்தும் சிகிச்சை இது. இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு அவர்கள் குணமடைகிறார்கள். அத்தனை பேருக்கும் சிகிச்சை தரும் அளவுக்கு பிளாஸ்மா தானம் கிடைக்குமா? ஜப்பானிய நிறுவனம் ஒன்று, செயற்கையாக இந்த எதிர்ப்பு அணுக்களை உருவாக்கப்போகிறது. அதேசமயம் பிளாஸ்மா சிகிச்சையை மத்திய சுகாதாரத்துறை அங்கீகரிக்கவில்லை. அதனால் பக்கவிளைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது இதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இன்னும் சில தினங்களில், தெளிவான சிகிச்சை முறைகள் அறிமுகமாகும் என்ற நம்பிக்கை வெளிச்சம் பரவியுள்ளது.

எச்சரிக்கைக் குறிப்பு: இவையெல்லாமே ஆய்வுநிலையில்தான் உள்ளன. எனவே இதுபோன்ற மருந்துகளைப் பற்றி கேள்விப்பட்டதை வைத்தே சுயமருத்துவத்தில் யாரும் இறங்கிவிடக் கூடாது. ஆய்வுமுடிவுகள் இறுதியாகி, இவை சந்தைக்கு வந்த பின்னும்கூட மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையிலேயே பயன்படுத்தவேண்டும்.