Published:Updated:

RTI அம்பலம்: ‘104’ டெலி மெடிசின் திட்டம்... இப்போது எப்படியிருக்கிறது?

RTI அம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்

‘மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசனையோ சிகிச்சையோ பெற்றால்தான் நிறைவாக இருக்கும்’ என்ற மக்களின் மனநிலைதான், இந்தத் திட்டம் வெற்றியடையாததற்கு காரணம்.

RTI அம்பலம்: ‘104’ டெலி மெடிசின் திட்டம்... இப்போது எப்படியிருக்கிறது?

‘மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசனையோ சிகிச்சையோ பெற்றால்தான் நிறைவாக இருக்கும்’ என்ற மக்களின் மனநிலைதான், இந்தத் திட்டம் வெற்றியடையாததற்கு காரணம்.

Published:Updated:
RTI அம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்
நேரடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல், ஆடியோ அல்லது வீடியோகால் மூலமாக மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதுதான் `டெலி மெடிசின்’.

இப்போதைய சூழலில், கொரோனா பரவலைத் தடுக்கவும் மருத்துவமனையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் ‘டெலி மெடிசின்’ சிறந்த தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசால் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், இடையில் சரிவர பயன்படுத்தப்படாமல் இருந்து, கொரோனா பரவலை அடுத்து மக்களின் கவனம் பெற்றிருக்கிறது.

டெலி மெடிசின் திட்டம் குறித்து தகவல்களைச் சேகரிக்க, விகடன் ஆர்டிஐ குழு களத்தில் இறங்கியபோதுதான் இந்த விவரங்கள் கிடைத்தன.

தமிழகத்தில் பொதுமக்களின் அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, அவசர காவல்துறை உதவிக்காக 100 ஆகிய சேவைகள் இருப்பதுபோல், அவசர மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக 2013 டிசம்பரில் 2,87,88,000 ரூபாய் செலவில் டெலி மெடிசின் திட்டம் தொடங்கப்பட்டது. `104 என்ற இலவச எண்ணுக்குத் தொடர்புகொண்டு, துறை சார்ந்த மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெறலாம்’ என்று சொல்லப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவ ஆலோசனை வழங்க, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரத்யேக கால் சென்டர்கள் உருவாக்கப்பட்டன. 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு ஏதுவாக, மருத்து வர்கள் மற்றும் பாரா மெடிக்கல் பட்டதாரிகள் ஒரு ஷிஃப்ட்டுக்கு 20 பேர் வீதம் மூன்று ஷிஃப்ட்களுக்கு 60-லிருந்து 70 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

சுப்புராஜி - விஜயபாஸ்கர்
சுப்புராஜி - விஜயபாஸ்கர்

இதற்கான பணியாளர்கள் சம்பளம், நிர்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் என, கடந்த ஏழு ஆண்டுகளில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2014-ம் ஆண்டில் மட்டும் 3,12,744 பேர் இந்தச் சேவையைப் பயன்படுத்தினர். நாளடைவில் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, 2017-ம் ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 2,26,980 ஆக குறைந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் தமிழகத்தில் கடுமையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுகூட டெலி மெடிசின் சேவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. ``கொரோனா சமயத்தில் இந்தத் திட்டம் பெரியளவில் நமக்கு கைகொடுக்காமல் போனதற்கு காரணம், தமிழக சுகாதாரத் துறையின் அலட்சியம்தான்’’ என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தமிழகத்தில் ‘டெலி மெடிசின்’ திட்டம் தொடங்கப்பட்டபோது தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த வி.கே.சுப்புராஜிடம் பேசினோம். ‘‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். பல இடங்களில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை இருக்கும். அதை நிவர்த்தி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது தான் டெலி மெடிசின் திட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசனையோ சிகிச்சையோ பெற்றால்தான் நிறைவாக இருக்கும்’ என்ற மக்களின் மனநிலைதான், இந்தத் திட்டம் வெற்றியடையாததற்கு காரணம்.

ஊருக்கு ஊர் மருத்துவமனைகள் பெருகிவிட்ட காரணத்தால், மக்கள் டெலி மெடிசினைத் தேடி வரவில்லை. கொரோனா தொற்று அச்சத்தால் இப்போது பலரும் நேரடியாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து, டெலி மெடிசின் முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இனிவரும் காலகட்டத்தில் 104 சேவையை எல்லோரும் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள்’’ என்றார்.

RTI அம்பலம்: ‘104’ டெலி மெடிசின் திட்டம்... இப்போது எப்படியிருக்கிறது?

``தமிழகத்தில் டெலி மெடிசின் திட்டம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது?’’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டோம். ‘‘டெலி மெடிசின் (104) திட்டம், தமிழகத்தில் சிறப்பான முறையில்தான் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் 104 எண்ணுக்கு வந்துள்ளன. உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசனைகள் இந்தத் திட்டத்தின் மூலம் இப்போதுவரை தொடர்ந்து வழங்கப்படுகின்றன. தற்கொலை எண்ணம் மேலெழுந்த ஒருவர், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக 104-க்கு தொடர்புகொண்டு பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் முகவரியை விரைந்து கண்டுபிடித்து அவரை தற்கொலை செய்துகொள்வதிலிருந்து மீட்ட நெகிழ்வான நிகழ்வெல்லாம் டெலி மெடிசின் திட்டத்தில் நடந்துள்ளது.

எல்லா ஊர்களிலும் அரசு பொது மருத்துவமனைகள் உள்ளன. ஆகையால், நேரடியாகவே மருத்துவரை அணுகி மக்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அதுதான் ‘104’ டெலி மெடிசின் திட்டம் ‘108’ அவசர ஆம்புலன்ஸ் திட்டத்தைப் போல் மக்களிடையே பிரபலமடையாததற்கு காரணம். இப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைவரின் கவனமும் டெலி மெடிசின் சிகிச்சையை நோக்கித் திரும்பியுள்ளது.

‘104’ டெலி மெடிசின் திட்டத்தில், மருத்துவர்களின் குரல்வழி மருத்துவ ஆலோசனைகளை மட்டுமே பெற முடியும். இதனால் சமீபத்தில் டெலி மெடிசின் ஆலோசனைகளுக்காக ‘இ-சஞ்சீவனி ஓபிடி’ (eSanjeevaniOPD) என்ற கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். https://esanjeevaniopd.in/ என்ற இணைய முகவரியில், தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர்களிடம் காணொலி மூலம் மக்கள் பெறலாம். இதில் வழங்கப்படும் மருத்துவரின் மின்னணுப் பரிந்துரைச் சீட்டை பதிவிறக்கம் செய்து, மருந்தகங்களில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். இந்தச் சேவை, அனைத்து தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் மக்களிடம் டெலி மெடிசினுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப அதன் சேவையும் அதிகரிக்கும்’’ என்றார்.

சென்னைக்கு தனி செயலி!

‘டெலி மெடிசின்’ மீது அனைவரின் கவனமும் திரும்பிவரும் இந்தச் சூழலில், ‘GCC Vidmed’ என்கிற இலவச டெலி மெடிசின் செயலியை வெளியிட்டுள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி. சென்னையின் சிறப்பு மண்டல அதிகாரி ராதாகிருஷ்ணன், மே 12-ம் தேதி இந்தச் செயலியை அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் பொதுமக்கள் மருத்துவர்களிடம் வீடியோ மூலம் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism