சமூகத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு, போதுமான சமூக பரிமாற்றங்கள் அவசியம். இதன்மூலம், ஒரு நபருடைய செயல்பாடு, சிந்தனை, நினைவுத்திறன் ஆகியவை மேம்படுவதோடு, அவருடைய மனநிலையும் மனநலமும் மேம்படும். மனச்சிதைவு குறைபாடுக்கு ஆனானோருக்குப் பல்வேறு சவால்கள் இருப்பதோடு, மற்றவர்களோடு இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு பழகுவதிலும் சிரமங்கள் உண்டு. குறிப்பாக, நோய் பாதிப்பினால், மூளையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களினால், இந்தச் சிரமம் ஏற்படுகிறது. சமூகம் இத்தகைய நோயாளர்களை எப்படி அணுகுகிறது என்பதில் இருந்தும் இந்தச் சிரமம் அதிகமாகிறது. மனச்சிதைவு நோயுள்ளவர்களோடு மற்றவர்கள் அதிகம் பழகாததாலும், அவர்களை ஒதுக்கிவைப்பதாலும் நோயாளிகளுடைய சமூக ரீதியான நிறன்கள் பாதிப்படைகின்றன.

மனச்சிதைவு (Schizophrenia) என்பது மிகக் கடுமையான மனநலக் குறைபாடு ஆகும். நமது மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் நபர்களை இக்குறைபாடு பாதித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய அனைத்துச் செயற்பாடுகளையும் மனச்சிதைவு நோய் பாதிப்பதால், அவர்களுடைய உத்வேகம் குறைந்துபோய்விடுகிறது. சிகிச்சை முறைகள் தற்போது மேம்பட்டுள்ளதால், அவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் உள்ள மற்றவர்களைப் போல் அவர்கள் இப்போது நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றனர். மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்னை, சமூக ரீதியான விலக்கலும் ஒதுக்கி வைக்கப்படுதலும் ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபல சமயங்களில், மனச்சிதைவு பாதிக்கப்பட்டோர் தனிமையில் இருப்பதோடு, வீட்டிலும் தனிமையிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு ஒருசில நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள், அவர்களோடு தொடர்பைப் பேணுவதிலும் சிரமம் உண்டு. அவர்களுடைய பெரும்பாலான பொழுதுபோக்குகள் தனிமை சார்ந்ததாகவே இருக்கும். மற்றவர்களோடு பழகுவதற்கு நோயாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமானால் அவர்களுடைய மொழித்திறன்கள், உடல்மொழி, மனநிலை; உணர்திறன்கள் நன்கு முன்னேற்றம் அடைவதை சென்னையில் இயங்கிவரும் SCARF (மனச்சிதைவு ஆராய்ச்சி மையம்) பல ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியில் கவனித்து வருகிறது.
இத்தகைய நோயாளிகளுக்கு, எவ்விதமான நெருக்கடியும் இல்லாத, சமநிலையான ஓர் இடத்தை உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கத்தில் ‘நம்ம ஏரியா’ என்ற திட்டத்தை ஸ்கார்ஃப் தொடங்கியுள்ளது. மனச்சிதைவு நோய் குறித்த புரிதலை மேம்படுத்த, உலகின் பல நாடுகளில், மே 24 உலக மனச்சிதைவு விழிப்புணர்வு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை ஒட்டி ‘நம்ம ஏரியா’ திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
‘நம்ம ஏரியா’வில் நோயாளிகள் வசதியாகவும், இயல்பாகவும் இருப்பதோடு அவர்களுக்குப் பிடித்த செயற்பாடுகளில் ஈடுபடவும், புதிய மற்றும் பழைய நபர்களைச் சந்தித்து உரையாடவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் அமைந்திருக்கிறது.
இந்தப் புதிய முன்னெடுப்பில், நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதோடு, தங்களுக்குப் பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடவும் முடியும். புத்தகம் வாசித்தல், கலைகளில் ஈடுபடுதல், யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளுதல், இசை கேட்டல், சினிமா பார்த்தல் பார்த்தல், விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற பல அம்சங்களில் தங்களுக்குப் பிடித்தமானவற்றைத் தேர்வு செய்து அவர்கள் அதில் ஈடுபட முடியும். இந்தச் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஸ்கார்ஃபில் உள்ள மருத்துவர்கள் உதவிசெய்வார்கள்.
சென்னை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்கார்ஃப் வளாகத்தில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 3 முதல் 6 மணி வரை செயல்படும் இந்த மையம், விரைவில் எல்லாம் நாட்களிலும் செயல்படுவதற்கான முயற்சிகளை ஸ்கார்ஃப் மேற்கொண்டிருக்கிறது. மனநல பாதிப்புள்ள அனைவரும் மையத்தை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நோயாளிகளை மையப்படுத்திய மனநல சேவைகளை வழங்கும் ‘பீசெஸ்’ திட்டத்தின் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மனநலத்தை மேம்படுத்துவதற்காக ஆய்வுப் பணிகளும், சமூகரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதும் இத்திட்டத்தின் அங்கங்களாகும்.
தொடர்புக்கு:
Schizophrenia Research Foundation (SCARF)
#R/7A North Main Road, Anna Nagar (West Extn.) Chennai 600 101, India
044-2615 3971 / 044-2615 1073