இன்றைய தேதியில் கொரோனா தடுப்பூசி ஒருவர் கையில் இருந்தால், அவர்தான் உலகின் நம்பர் 1 பணக்காரர். அப்படி ஒரு தடுப்பூசியை தங்களுக்கு மட்டுமே வைத்துக்கொண்டு, பாதிக்கப் படும் உலக மக்களுக்குக் கிடைக்காமல் தடுக்க எவரேனும் முயன்றால், அவர்தான் உலகின் நம்பர் 1 வில்லன். இந்த வில்லன் ரோலுக்கு ஆசைப்படுகிறார், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். கொரோனா தடுப்பூசியை உருவாக்கிவரும் ஜெர்மனி நிறுவனம் ஒன்றை அப்படியே அபகரித்து, ‘இந்த மருந்தை அமெரிக்காவுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்’ என அவர் இரக்கமற்ற பேரம் நடத்தியது அம்பலமாகியுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வந்த மிக மோசமான கொள்ளை நோயாகக் கருதப்படுகிறது கொரோனா. சுமார் 35 மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் இதற்கான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளன. இவற்றில் நான்கு நிறுவனங்கள் தடுப்பூசியை உருவாக்கிவிட்டன. இவை முறையான பரிசோதனைகளைக் கடந்தே மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

மார்ச் 2-ம் தேதி, வெள்ளை மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார் ட்ரம்ப். மருத்துவ நிபுணர்கள், கொரோனா தடுப்பூசியை உருவாக்கிவரும் நிறுவனங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. கொரோனா நிலவரம் கையை மீறிப் போனால், அந்தத் தேர்தல் முடிவு ட்ரம்புக்கு எதிராக வரக்கூடும். எனவே, ‘‘தேர்தலுக்கு முன் எனக்கு தடுப்பூசி வேண்டும். யார் உருவாக்கித் தருவீர்கள்?’’ என்று கேட்டார் ட்ரம்ப். ஆனால், ‘‘அது சாத்தியமில்லை’’ என்று நிபுணர்கள் கையை விரித்தனர்.

ட்ரம்புக்கு இது புரியவில்லை. ‘‘மருந்து கிட்டத்தட்ட ரெடியாக இருக்கிறது என்கிறீர்கள். அதை பாட்டிலில் அடைத்து விற்க வேண்டியதுதானே!’’ என்று கேட்டார்.

அது சில நடைமுறைகளைத் தாண்டி வர வேண்டும் என்பதை பொறுமையாக அவருக்கு விளக்கினர். “ஒரு தடுப்பூசி தயாரானதும் அதை முதலில் விலங்குகளிடம் சோதிக்க வேண்டும். ஆபத்தான பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்த பிறகே அது மனிதர்களிடம் சோதிக்கப்படும். முதலில் சில டஜன் மனிதர்களுக்கு அதைச் செலுத்த வேண்டும். வெவ்வேறு வயதுகளில் இருக்கும் ஆரோக்கியமான மனிதர்கள் தேர்வுசெய்யப் பட்டு, அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். ஓராண்டு காலத்துக்கு அவர்களின் உடலில் அது ஏற்படுத்தும் விளைவுகளைச் சோதிக்க வேண்டும்.

இந்த முதல்கட்ட சோதனையையடுத்து இரண்டாவதுகட்ட சோதனை சில நூறு பேரிடம் செய்ய வேண்டும். நோய், எந்தப் பகுதியில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியதோ அந்தப் பகுதியில் இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். மூன்றாவதுகட்டமாக சில ஆயிரம் பேரிடம் சோதனை நடத்த வேண்டும். ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல், நோய் வருவதைத் தடுக்கிறது என்பது உறுதியான பிறகே அது வியாபாரரீதியாகத் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும். இதில் சில கட்டங்களைத் தவிர்த்துவிட்டு, 24 மணி நேரமும் ஆய்வுசெய்து, வேகவேகமாக அனுமதிகளைப் பெற்று சோதனை நடத்தினாலும், தடுப்பூசி விற்பனைக்கு வர குறைந்தது 18 மாதங்கள் ஆகும்’’ என்றனர் நிபுணர்கள். ட்ரம்ப் மிகுந்த ஏமாற்றத்துடன் அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டார்.

ஜெர்மனியின் க்யூர்வேக் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் தலைவர் டேனியல் மெனிசெல்லாவும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர். கூட்டம் முடிந்த ஒன்பது நாள்கள் கழித்து அவர் அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த நிறுவனத்தின் அதிபர் இங்மார் ஹோயர் அந்தப் பதவிக்கு வந்தார்.

`Welt Am Sonntag’ என்ற ஜெர்மனிய பத்திரிகை, இந்த மாற்றத்தின் பின்னணியில் இருந்த பேரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. ‘க்யூர்வேக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை யும் அந்தத் தொழில்நுட்பத்தையும் 7,500 கோடி ரூபாய்க்கு ட்ரம்ப் பேரம் பேசினார். அந்தத் தடுப்பூசியை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் என ட்ரம்ப் சொன்னார்’ என எழுதியது அந்தப் பத்திரிகை.

உடனே ஜெர்மனியின் அரசியல்வாதிகள் கொதித்துப்போனார்கள். ‘ஜெர்மனியின் மருத்துவ அறிவியல் விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கங்கள் அங்கு கிளம்பின. ஜெர்மனி சுகாதார அமைச்சர் யென்ஸ் ஸ்பான், ‘‘க்யூர்வேக் நிறுவனம் அமெரிக்காவுக்கு விற்கப்படாது. அந்த நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஒட்டுமொத்த உலகத்துக்கும் பயன்படும். ஒரே ஒரு நாட்டுக்கு உரிமையாகாது’’ என்றார். அதன் பிறகு க்யூர்வேக் நிறுவனமும் இதையே சொன்னது.

அமெரிக்காவிலேயே நிறைய நிறுவனங்கள் இருக்கும்போது, இந்த க்யூர்வேக் நிறுவனத்திடம் ட்ரம்ப் ஏன் பேரம் பேச வேண்டும்? அந்த ரகசியத்தை உணர்வதற்கு மூன்று தகவல்கள் முக்கியம்.

1. மைக்ரோசாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ், தடுப்பூசி ஆராய்ச்சிகளுக்கு நிறைய நன்கொடை வழங்குகிறார். அவரின் நன்கொடையில் மலேரியா மற்றும் ஃப்ளூ ஜுரங்களுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியைச் செய்துவருகிறது க்யூர்வேக். ஏற்கெனவே உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டறிய முயன்றது, நோவாவேக்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனம். இன்னொரு அமெரிக்க நிறுவனமான மாடெர்னா, ஆபத்தான மெர்ஸ் வைரஸுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியைச் செய்துவந்தது. இந்த மூன்று ஆய்வுகளும் கிட்டத்தட்ட கொரோனா வுக்கு நெருக்கமானவை என்பதால், இவர்களால் சீக்கிரம் தடுப்பூசி உருவாக்க முடியும்.

2. பொதுவாக, தடுப்பூசிகளில் உயிருள்ள வைரஸ்தான் இருக்கும். ஆபத்தான வைரஸை வீரியம் குறைந்த நன்மைபயக்கும் வைரஸாக விஞ்ஞானிகள் மாற்றி தடுப்பூசி மருந்தில் சேர்ப்பார்கள். இது உடலுக்குள் செலுத்தப்படும் போது, இந்த வைரஸுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ என்ற எதிர்ப்பு அணுக்களை நம் உடல் உருவாக்கும். எதிர்காலத்தில் ஆபத்தான வைரஸ் தொற்றினாலும், அதை எதிர்க்கும் தகுதியை நம் நோய் எதிர்ப்பு சக்தி பெறும். தடுப்பூசிகளின் தத்துவம் இதுதான். ஆனால், அமெரிக்காவின் மாடெர்னா, ஜெர்மனியின் க்யூர்வேக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இப்போது தடுப்பூசிகளை உருவாக்குகின்றன. இதில் உயிருள்ள வைரஸை உருவாக்கத் தேவையில்லை. வைரஸின் மரபணு வரிசையைப் பார்த்துவிட்டு, அதன் அடிப்படையில் வெகுவிரைவில் தடுப்பூசியை உருவாக்கும் முறை இது.

3. இப்போது கொரோனா வைரஸின் தாக்குதல் மையமாக சீனா இல்லை, ஐரோப்பா தான் உள்ளது. அதனால், ஜெர்மனியின் க்யூர்வேக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய கமிஷன் 1,100 கோடி ரூபாய் நிதி அளித்து, கொரோனா தடுப்பூசியை சீக்கிரம் உருவாக்கச் சொல்லியிருக்கிறது. ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா லெயன் இதற்காக க்யூர்வேக் நிறுவனத்தினரைச் சந்தித்துவிட்டு, ‘‘இன்னும் ஆறே மாதங்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும்’’ என அறிவித்தார். இது உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

வழக்கமான சில பரிசோதனை நடைமுறை களைப் புறக்கணித்துவிட்டு, ஜெர்மனியின் க்யூர்வேக் நிறுவனத்தின் தடுப்பூசி விரைவில், அதாவது முதலில் விற்பனைக்கு வரக்கூடும். அதனாலேயே அமெரிக்காவுக்கு இதைச் சொந்தமாக்க முயன்றுள்ளார் ட்ரம்ப் என்பதுதான் அந்தப் பத்திரிகை வைக்கும் குற்றச்சாட்டு. அது அம்பலமானதால் இப்போது அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனத்துக்கு, ‘விதிகளையும் நடைமுறைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, சீக்கிரம் தடுப்பூசியை விற்பனைக்குக் கொண்டு வாருங்கள்’ என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சிறு தவறு நிகழ்ந்தாலும் அது மாபெரும் விபரீதத்தில் முடியும் என்பதால் அரசியல் அழுத்தங்களுக்குப் பணிய முடியாமல் மருந்து நிறுவனங்கள் திணறுகின்றன.

கொரோனா போன்ற ஒரு வைரஸ் உலகம் முழுவதும் பயணம் செய்யும்போது, இயல்பாக இரண்டு விஷயங்கள் நிகழும். ஒன்று, பெரும்பாலான மக்களுக்கு இந்த வைரஸின் அறிமுகம் கிடைத்து, அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். இரண்டு, வைரஸ்கள் அடிக்கடி தகவமைப்பின் அடிப்படையில் உருமாற்றம்கொள்ளும். அப்படி ஒரு மாற்றத்தில் இந்த வைரஸே ஆபத்தில்லாத கிருமியாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டில் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொரோனா அபாயம் தீர வேண்டும். இதுவே ஒட்டுமொத்த உலகின் பிரார்த்தனையும்!

சீனாவிலும்

ரெடி!

அமெரிக்கா தடுப்பூசி ஆராய்ச்சியில் இறங்கிய அதே நேரத்தில், சீனாவும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி விட்டது. இப்போது அது மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதை உருவாக்கியவர், சென் வெய் என்கிற 54 வயது பெண்மணி. ராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் சீனாவின் முக்கியமான வைரஸ் நிபுணர் இவர். கொரோனா முதலில் தாக்கிய வூஹான் நகரத்தில் ஜனவரி மாதம் முதல் தங்கியிருக்கும் அவர், அந்த வைரஸை அக்குவேறு ஆணிவேறாக அலசியுள்ளார்.

ஏற்கெனவே 2003-ம் ஆண்டு சார்ஸ் தாக்கியபோது, இவர் உருவாக்கிய ஒரு ஸ்ப்ரே, சீன மருத்துவப் பணியாளர்களை அந்தக் கிருமியிடமிருந்து காத்தது. எபோலாவுக்கு தடுப்பூசி கண்டறிந்த இவரை ‘எபோலா டெர்மினேட்டர்’ என்கிறார்கள்.

‘மாபெரும் ஒரு கொள்ளை நோய் உலகம் முழுக்கப் பரவினால், கோடிக்கணக்கான மக்கள் இறப்பார்கள். சுமார் 225 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்’ என உலகவங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு கணித்தது. கொரோனா, இந்தப் பண இழப்பை அதற்குள்ளாகவே நிகழ்த்திவிட்டது.

‘‘இவ்வளவு பெரிய இழப்பைத் தடுக்க, சில நூறு கோடிகளைச் செலவிட உலகம் தயாராக இல்லை. எந்த நிமிடம் போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கும் நாடுகள், நோய்களை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை’’ என்று ஆதங்கத்துடன் சொல்கிறார் பில் கேட்ஸ். ‘மனித இனத்தை அச்சுறுத்துவது ஆயுதங்கள் அல்ல... கிருமிகள்தான்’ என்று பல ஆண்டுகளாகவே சொல்லிவரும் அவர், ‘ஆபத்தான கொள்ளை நோய்களை எதிர்கொள்ள உலக அளவில் திட்டம் வேண்டும்’ என்கிறார். இதற்காக பல கோடி ரூபாயை தன் அறக்கட்டளை மூலம் செலவிட்டுவரும் அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்பைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். ஆனால், ட்ரம்ப் ஆர்வம் காட்டவில்லை.

‘‘முன்பைவிட உலகம் சுருங்கிவிட்டது. உலகின் ஒரு மூலையில் உருவாகும் எந்தக் கிருமியையும் ஒரே மாதத்தில் உலகம் முழுக்கக் கொண்டுபோய் சேர்க்கும் அளவுக்கு மக்கள் பயணம் செய்கிறார்கள். ஆனால், நோய்களின் தன்மையைக் கண்டறியும் நோயியல் நிபுணர்களுக்கும், அவை எப்படிப் பரவுகின்றன என்பதைக் கண்டறியும் தொற்றுநோய் நிபுணர்களுக்கும் கடும் பற்றாக்குறை உள்ளது. நோய்கள் தொற்றுவதைத் தடுக்கும் பயிற்சிகளும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் முறைகளும் போதாது. இதனால்தான் நோய்களின் முன்பு உலகம் மண்டியிட்டுத் தோற்கிறது. குறிப்பாக, ஏழை நாடுகளைப் பரிதவிக்கவிடுகிறோம். நம்மிடம் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களையும் நோய்த்தடுப்புக்குப் பயன்படுத்தவில்லையென்றால், அவை எதற்கு?’’ என்று கேட்கிறார் பில் கேட்ஸ்.

‘இஸ்ரேலியர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். நல்லவேளையாக அவர்கள் கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டார்கள்’ - 20 மி.லி அளவில் உள்ள மருந்து பாட்டிலின் படத்துடன் இப்படி ஒரு தகவல் வாட்ஸப் மூலம் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் மிகேல் ஆராய்ச்சி மையம் இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது உண்மைதான். ஆனால், இது கோழிகளுக்கு வரும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசி. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. மனிதர்களுக்கு இது வேலைக்காகாது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர் ஒரு பெண்! அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசிப் பரிசோதனை வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது. வழக்கமாக, ஒரு வைரஸ் தாக்கினால் அதற்கு தடுப்பூசி கண்டறிய சில ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், mRNA-1273 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, 63 நாள்களில் பரிசோதனைக்குத் தயாராகிவிட்டது. காரணம், அவசரம்!

கொரோனா வைரஸின் மரபணு வரிசையை அடையாளம் கண்ட சீன விஞ்ஞானிகள், அதை ஜனவரி 11-ம் தேதியே பல உலக நாடுகளுக்குப் பகிர்ந்தனர். அதை வைத்து செயற்கையாக வைரஸை உருவாக்கி ஆராய்ச்சி செய்ய முடியும். அப்படித்தான் இந்தத் தடுப்பூசி உருவானது. வழக்கமாக ஒரு மருந்து, பரிசோதனைக்கூடத்தில் விலங்குகளிடம்தான் முதலில் சோதிக்கப்படும். ஆனால், கொரோனா பாதிப்பின் சூழல் கருதி, இந்தத் தடுப்பூசி நேரடியாக மனிதர்களிடம் சோதிக்கப்படுகிறது.

மாடெர்னா நிறுவனம் உருவாக்கிய இந்தத் தடுப்பூசி, சியாட்டில் நகரில் தன்னார்வலர்கள் மத்தியில் சோதிக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முதலில் போட்டுக்கொண்டவர், ஜெனிஃபர் ஹாலர் என்கிற 43 வயதுடைய பெண்மணி. கம்ப்யூட்டர் நிபுணரான இவர், ‘‘ஃப்ளூ தடுப்பூசியைவிட இதைப் போட்டுக்கொள்ளும்போது வலி குறைவாகவே உள்ளது. நான் ஆரோக்கியமாகவே உணர்கிறேன். தடுப்பூசி சீக்கிரமே பயன்பாட்டுக்கு வந்தால், லட்சக்கணக்கான மக்களைக் காக்கலாம். அதற்காக இந்தப் பரிசோதனையில் என்னை ஈடுபடுத்துவதில் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார். இவரைப்போலவே சியாட்டில் நகரில் உள்ள கம்ப்யூட்டர் பணியாளர்கள் பலரும் இந்த ஆய்வில் துணிச்சலாக இணைந்துள்ளனர். இவர்களைப்போல் 45 பேரிடம் முதல்கட்ட சோதனை நடைபெறுகிறது. 28 நாள்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி போடப்படும். 12 மாதங்களுக்கு அதன் விளைவுகளை கவனிப்பார்கள்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவது ஒரு பக்கம் இருக்கட்டும். கொரோனா தாக்கியவர்களுக்கு என்ன சிகிச்சை? இதற்கு நேரடி நிவாரணம் தரும் மருந்துகள் இல்லை என்பதுதான் யதார்த்தம். நோய் தாக்கியவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்தே சிகிச்சை தருகிறார்கள்.

கொரோனா முதலில் தாக்கிய சீனாவில் 30 வகை மருந்துகளை அங்கீகரித்து சிகிச்சை தந்தார்கள். இவற்றில் கியூபாவின் தயாரிப்பான Interferon Alpha 2b என்ற மருந்து முக்கியமானது. சீனாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்ட இந்த மருந்துடன் கியூப மருத்துவர்கள் இப்போது இத்தாலியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.

ஃப்ளூ ஜுரத்தை குணப்படுத்துவதற்காக ஜப்பான் நிறுவனம் ஒன்று தயாரித்த favipiravir வகை மருந்தும் கொரோனாவை குணப்படுத்துவதாக சீன உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி தேசிய மையத்தின் இயக்குநர் ஜாங் ஜின்மின் அறிவித்துள்ளார். சீனாவில் 200 நோயாளிகளுக்கு இதைக் கொடுத்துப்பார்த்தனர். அவர்களுக்கு கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியாவும் குணமடைந்து, வைரஸும் காணாமல்போனது. இப்போது இதே மருந்து ஜப்பானிலும் கொரோனா நோயாளிகளுக்குத் தரப்படுகிறது. ஆனால், தென் கொரியா இந்த மருந்தை நம்ப மறுக்கிறது.

ஆஸ்திரேலியாவில் மலேரியா ஜுரத்துக்குத் தரப்படும் Chloroquine மாத்திரையையும், Lopinavir, Ritonavir ஆகிய மருந்துகள் இணைந்த Kaletra என்ற மாத்திரையையும் தந்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இது ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைரஸின் தீவிரத்தைக் குறைப்பதற்காகத் தரப்படும் மாத்திரை.

இந்தியாவிலும் நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து இந்த Lopinavir, Ritonavir மருந்துகளைப் பயன்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.