கொரோனாவை உலகம் முழுக்கத் தொற்றக்கூடிய நோயாக (Pandemic) அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். “வரும் நாள்களில் சர்வதேச அளவில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம்; உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்; பரவும் நாடுகளின் பட்டியல் நீளலாம்” என்று மார்ச் 11-ம் தேதி அறிவித்திருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் (Tedros).

மூன்று மாதங்களுக்குள் 118 நாடுகளில் பரவியிருக்கிறது கோவிட்-19 வைரஸ். ஆனால், இன்னும் இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ‘கடந்த டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய ஒரு வைரஸுக்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை?’ என்று தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டுவரும் சூழலில், ‘மருந்தெல்லாம் கண்டுபிடித்துவிட்டார்கள். அதற்கான டிமாண்ட் அதிகமாகும்போது அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கப் பெருநிறுவன முதலாளிகள் காத்திருக்கின்றனர்’ என்று சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு வலம் வந்துகொண்டிருக்கும் தகவல் மக்களைத் தலைச்சுற்ற வைத்திருக்கிறது.

உண்மை நிலை

என்ன?

தொற்றுநோயியல் மருத்துவர் அப்துல் கஃபூரிடம் பேசினோம். “கோவிட்-19 கொரோனா வைரஸை அழிக்கவோ, தடுக்கவோ முழுமையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா என்றில்லை; ஒரு சில வைரஸ்களைத் தவிர பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக அழிக்க மருத்துவத்தில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். வைரஸ் குடும்பம், பாக்டீரியா அல்லது பிற தொற்றுகளைப்போல எல்லா நேரமும் ஒரே மாதிரியான உடலமைப்பையும் தன்மையையும் கொண்டிருக்காது. உதாரணமாக, ஃப்ளூ வைரஸ் தனது குணத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், அவற்றை முழுமையாக, முற்றிலுமாக அழிப்பதற்கு மருந்தை உருவாக்குவது என்பது கடினமான விஷயம். இது பெரும்பாலான வைரஸ்களுக்குப் பொருந்தும். `அப்படியென்றால் வைரஸ்களை அழிக்கவே முடியாதா?’ என்று கேட்டால், தனது பரிணாம வளர்ச்சியையும் குணங்களையும் எந்தவொரு வைரஸ் மாற்றாமல் இருக்கிறதோ அதை அழிக்கவும், வருமுன் தடுக்கவும் மருந்துகள் தயாரிக்கப்பட்டுவிடும்.

ஒருவேளை ஒரு வைரஸை அழிக்கவும் தடுக்கவும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை உடனே மருத்துவர்கள் அறிவித்துவிட மாட்டார்கள். காரணம், ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பதைவிட, அந்த மருந்தின் தன்மையை மனித உடலில் பரிசோதிப்பதற்கு கூடுதல் உழைப்பைச் செலவிட வேண்டிய கடமை மருத்துவர்களுக்கு இருக்கிறது. ஒரு மருந்தை பரிசோதிப்பதற்குப் பல கட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டமாக பரிசோதிக்கப்பட்டு ஒரு மருந்து நோயாளிக்கு வருவதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை வருடமாவது ஆகலாம். அதுவரை தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுதான் ஆக வேண்டும்” என்றார்.

ஆம், உண்மைதான். எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது ஆபத்தானது. ஒரு மருந்து சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவே குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும். இந்த உண்மையை உணர்வதுதான் இன்றைய அவசர, அவசியத் தேவை. அதைவிடுத்து வதந்திகளைப் பரப்புவது, கொரோனாவைவிட ஆபத்தானது!