Published:Updated:

கூடங்குளம்: தடியடியை எதிர்த்து வழக்கு!

கூடங்குளம்: தடியடியை எதிர்த்து வழக்கு!
கூடங்குளம்: தடியடியை எதிர்த்து வழக்கு!
கூடங்குளம்: தடியடியை எதிர்த்து வழக்கு!

மதுரை: கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது  காவல்துறையினர் தடியடி நடத்தியதை எதிர்த்து 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ம்னித உரிமைக்கான மக்கள் ஒன்றியத்தை சேர்ந்த அ.மார்க்ஸ் மற்றும்  வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில்  தனித்தனியாக இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளத்தில் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படுவதை கண்டித்து  கடந்த திங்கட்கிழமையன்று,அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது  போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.இதனையடுத்து  காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும்,கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர்.இதில் பலர் காயமடைந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.