Published:Updated:

கூடங்குளம் பகுதியில் ஏடிஜிபி ஜார்ஜ் நேரில் ஆய்வு!

நெல்லை: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் பல கிராம  மக்கள் போராடி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ் இன்று கூடங்குளம்  பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

கூடங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்  தேவைப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

பிறகு முக்கிய காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.