Published:Updated:

போராட்டத்திற்கு ஆதரவு: கூடங்குளம் வந்த அச்சுதானந்தன் தடுத்து நிறுத்தம்!

போராட்டத்திற்கு ஆதரவு: கூடங்குளம் வந்த அச்சுதானந்தன் தடுத்து நிறுத்தம்!
போராட்டத்திற்கு ஆதரவு: கூடங்குளம் வந்த அச்சுதானந்தன் தடுத்து நிறுத்தம்!

திருவனந்தபுரம்: அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,  இன்று கூடங்குளம் வர முயன்ற கேரள முன்னாள் முதல்வரான அச்சுதானந்தன்  களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு, கேரள மாநில   எதிர்க்கட்சி தலைவரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்  வி.எஸ்.அச்சுதானந்தன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அணுமின் நிலைய பிரச்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கு  எதிராக, அவர் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அணு உலை  மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை.  கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு வர இருக்கும் நிலையில் அதை மூடுவது  நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று அக்கட்சி கூறி உள்ளது.அதே சமயம் உரிய  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது.

இந்நிலையில் கட்சியின் இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, அணுமின் நிலையத்துக்கு  அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அக்கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை  ஏற்படுத்தி உள்ளது. அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு  தெரிவிப்பதற்காக அச்சுதானந்தன் ஏற்கனவே ஒரு முறை கூடங்குளம் வர இருந்தார்.  அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் அவரது வருகையை தடுத்து  நிறுத்திவிட்டது.

இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்  வகையில் அச்சுதானந்தன்,தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 9.30 மணி  அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கூடங்குளம் புறப்பட்டார்.

தடுத்து நிறுத்தம்

ஆனால் அவரது வாகனத்தை  போலீசார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளையிலேயே தடுத்து நிறுத்தினர். கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அங்கு செல்ல முடியாது என்று கூறி அவரை  திருவனந்தபுரம் திரும்பிச் செல்லுமாறு  போலீசார் அறிவுறுத்தினர்.இதனால் அங்கு  ப்ரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து அச்சுதானந்தன் திருவனந்தபுரம் திரும்பிச் சென்றார்.

போராட்டத்திற்கு ஆதரவு: கூடங்குளம் வந்த அச்சுதானந்தன் தடுத்து நிறுத்தம்!

முன்னதாக திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," கூடங்குளம்  அணுமின் நிலையம் தென் மாநில மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஆகும்.  பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் அணுஉலைகளை மூட முடிவு செய்து  உள்ளன.அதை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். நான் செவ்வாய்க்கிழமை கூடங்குளம்  செல்கிறேன்.அணுமின் நிலையங்கள் மிகவும் ஆபத்தானவை.

##~~##
தமிழ்நாட்டில் கேரள எல்லையையொட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ  ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்க்கிறேன். அங்கு ஆய்வுக்கூடம் அமைய இருக்கும் இடம்  இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணைக்கு அருகே இருப்பதால்,  அணையின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். அங்கு ஆய்வுக்கூடம் அமைய இருப்பது  பற்றி கேரள அரசுடன், தமிழக அரசு ஆலோசனை நடத்தவில்லை.
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்  அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.  ஆய்வுக்கூடத்துக்காக பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசும்,  தமிழக அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.