Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைப்பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைப்பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை!
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைப்பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைப்பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களை, இலங்கைக் கடற்படை இன்று காலை  சிறைப்பிடித்துச் சென்றது. 

 பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்துச் செல்வது அன்றாட நிகழ்சியாக நடந்துவருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க, ஆழ்கடல் மீன்பிடிப்பை அமல்படுத்துவது குறித்து இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிப்பதுகுறித்தும், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் டெல்லியில், இந்திய - இலங்கை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஏற்கெனவே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவித்ததற்கு, இந்திய அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


 நன்றி சொல்லி இரண்டு நாள்களுக்குள்ளாகவே, மீண்டும் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, ராமேஸ்வரத்திலிருந்து விசுவாசம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மரிய நேசர், சந்தியா, மத்திய பாலன், கிரீன்சன், ரோமன், பாஸ்கரன், சுதன், மோசஸ் ஆகிய 8 மீனவர்களையும், இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை சிறைப்பிடித்துச் சென்றனர்.  சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்,விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு