Published:Updated:

கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது

விகடன் விமர்சனக்குழு
கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது
கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது
கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது

சென்னை: கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி  நிறைவடைந்துள்ளதாகவும்,விரைவில் மின்உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே,  விநாயகர் சதுர்த்தி அன்று கூடங்குளம் அணு உலையில் முக்கிய எரிபொருளான  யுரேனியம் நிரப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதற்காக ‘தானியங்கி ரியாக்டர் ஆபரேஷனல் மெக்கானிசம்’ என்ற தொழில் நுட்பம்  பயன்படுத்தப்பட்டது.

##~~##
இந்நிலையில்,அணு உலையில் எரி பொருள் நிரப்பும் பணி முடிவடைந்துவிட்டன.  மொத்தமுள்ள 163 எரிபொருள் கலன்களும், உயர்தர யுரேனியம் கொண்டு நிரப்பப்பட்டு  விட்டன. இதன் எடை 75 டன் ஆகும். அணு எரிசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின்  தொழில்நுட்ப குழுவினரின் நேரடி பார்வையில் இந்த பணி நடைபெற்றது.
எரிபொருள் நிரப்பும் பணியை சர்வதேச அணு சக்தி விஞ்ஞானிகள் ஆன்லைன் நேரடி  காட்சி வாயிலாக கண்காணித்தனர். எரிபொருள் நிரப்பிய உடன் கலன்கள் செம்மையாக  மூடப்பட்டு விட்டன. பிற பாதுகாப்பு அம்சங்களை ரஷ்ய மற்றும் இந்திய அணுசக்தி  விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கான அறிக்கை அணுசக்தி ஒழுங்குமுறை  வாரியத்திடம் விரைவில் அளிக்கப்படும். வாரியத்தின் அனுமதி கிடைத்த உடன் அணு  உலை செயல்பட தொடங்கும் என்று இந்திய அணு சக்தி கழக உயர்மட்ட வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.