Published:Updated:

பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க குடியரசுத் தலைவருக்கு நேரமில்லையா..! ஆதங்கப்படும் ராமேஸ்வர மீனவர்கள்

பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க குடியரசுத் தலைவருக்கு நேரமில்லையா..! ஆதங்கப்படும் ராமேஸ்வர மீனவர்கள்
பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க குடியரசுத் தலைவருக்கு நேரமில்லையா..! ஆதங்கப்படும் ராமேஸ்வர மீனவர்கள்

பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க குடியரசுத் தலைவருக்கு நேரமில்லையா..! ஆதங்கப்படும் ராமேஸ்வர மீனவர்கள்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து குடியரசுத் தலைவர் ஆறுதல் சொல்லவில்லை மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று அகில இந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத் தலைவர் சின்னதம்பி தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க குடியரசுத் தலைவருக்கு நேரமில்லையா..! ஆதங்கப்படும் ராமேஸ்வர மீனவர்கள்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அவரது வருகை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அகில இந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தலைவர் சின்னதம்பி, 'தமிழக கவர்னர், கழிவறை வரை சென்று மக்களின் குறையை கேட்டு ஆய்வு செய்த நிலையில் இராமேஸ்வரம் வரும் ஜனாதிபதி பாதிக்கப்பட்ட அப்பகுதி மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பார் என மீனவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இராமேஸ்வரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மீனவர்களைச் சந்திக்காமல் சென்றுவிட்டார். 

இந்நிலையில் ஜனாதிபதி வருவதற்கு 4 நாட்களுக்கு முன்னர் இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் ஆலோசனை செய்து வந்த வேளையில் சில ஆளும் கட்சி பிரமுகர்கள் அவர்களைச் சந்தித்து ஜனாதியைச் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வாங்கி தருகிறோம். மேலும் மீனவர்களை விடுவிக்க உடனடியாக ஏற்பாடு செய்கிறோம் என ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி வரும்போது சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்து ஏமாந்து போயினர். மேலும் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கடலில் தத்தளித்து கரை சேர்ந்த இராமேஸ்வரம் மீனவர்கள் பலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என இராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இவ்வாறு ஒகி புயலால் பாதிப்படைந்து கரைதிரும்பிய இராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் ஆறுதலுக்காகவாவது ஜனாதிபதி அந்த மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம் என சக மீனவர்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். ஜனாதிபதியின் உயிரைக் காப்பாற்ற மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கலாம். ஆனால் ஜனாதிபதி மீனவனுக்கு ஆறுதல் கூட சொல்லமாட்டாரா? என மீனவர்கள் ஆதங்கப்பட்டனர். மேலும் மீனவர்கள் உழைத்துக் கொடுக்கும் 60 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி மற்றும் 50 ஆயிரம் கோடி உள்நாட்டு செலாவணி வேண்டும். ஆனால், மீனவர்கள் வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு