Published:Updated:

கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி பெட்டிகள் பறிமுதல்: அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் அதிரடி

பிரபலமான பிராண்டுகளின் பெயரில் கள்ளத்தனமாக பொருள்களை தயாரித்து சந்தைப்படுத்துபவர்கள் மீது குவியும் புகார்களையடுத்து, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

நேற்று விருதுநகர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் கமலி தலைமையிலான பிரிவினர், சட்ட விரோதமாக பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட பீடிக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு லட்சமாகும். விருதுநகரிலிருந்து பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்து வந்த சிவகங்கை மதகுபட்டியைச் சார்ந்த சாகுல் ஹமீது என்பவரை, அமலாக்க பிரிவினர் கைது செய்தனர்.

கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி பெட்டிகள் பறிமுதல்: அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் அதிரடி

இதேபோல் மதுரை அருகே கப்பலூரில் மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் பிளாஸ்டிக் மற்றும் வீட்டு உபயோக பொருள்களை தயாரித்து வந்த நிறுவனத்தில் மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் சோதனை நடத்தினார்கள். மும்பை நிறுவனம் கொடுத்த புகார் உண்மை என்பது தெரிந்தது. 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்தனர். அந்த சட்டவிரோத நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, அதன் உரிமையாளர் குணசிங்கை தேடி வருகிறார்கள். இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தயாராகும் போலி நிறுவனங்கள் மீது அதிரடி சோதனைகள் தொடரும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு