Published:Updated:

``மீன்கள் சடலங்களைச் சாப்பிடுவதில்லை'' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீன் ஆராய்ச்சி நிறுவனம்

கொச்சி: ஒகி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். அவர்களது சடலங்கள் கடலில் மிதப்பதாகச் சொல்லப்படுகிறது. கடலில் மிதக்கும் சடலங்களை மீன்கள் சாப்பிடுவதாகவும், அதனால், மீன்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் வதந்தி கிளம்பியது. இதனால், மீன் விற்பனை சரிவைச் சந்தித்தது.  

இதையடுத்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய மீன்வளத்துறை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொதுவாக மீன்கள் மனித சடலங்களை உண்பதில்லை. பெரிய மீன்கள் சிறிய மீன்களை மட்டுமே உண்ணும். இறந்து போனவற்றை உண்ணும் பழக்கம் மீன்களுக்குக் கிடையாது. மத்தி போன்ற சிறிய மீன்கள்கூட இறந்தவற்றை உண்பதில்லை. மீன்களின் உணவான பிளாங்கடன், சூப்ளாங்டன் கடல்நீருடன் சேர்ந்து விழுங்கும்போது அவற்றுக்குக் கிடைக்கக் கூடியவை. 

பெரும்பாலான பெரிய மீன்கள் சிறிய ரக மீன்களை வேட்டையாடி உண்பவை. உயிருடன் இருப்பதையே சாப்பிட விரும்புவை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுறாக்களுக்குக்கூட இறந்தவற்றை உண்ணும் பழக்கமில்லை. சில சுறாக்களுக்கு மட்டும் மனித உடலை சாப்பிடும் வழக்கமிருக்கிறது. இந்தச் சுறா இனங்கள்கூட ஆஸ்திரேலிய கடல்பகுதியில்தான் காணப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு