Published:Updated:

காணாமல் போன மீனவர்கள் பட்டியலை வெளியிடாத அரசு..!

காணாமல் போன மீனவர்கள் பட்டியலை வெளியிடாத அரசு..!
காணாமல் போன மீனவர்கள் பட்டியலை வெளியிடாத அரசு..!

காணாமல் போன மீனவர்கள் பட்டியலை வெளியிடாத அரசு..!

காணாமல் போன மீனவர்கள் பட்டியலை வெளியிடாத அரசு..!

நவம்பர் மாதம் 30-ம் தேதி வீசிய ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது. காற்றும் மழையும் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. கரையோரப் பகுதிகளும், கடலோரப் பகுதிகளும் பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பலியானதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்து போன பல மீனவர்களின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதுவரை கன்னியாகுமரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களாக குமரி மாவட்டத்தில் 176 பேரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 41 பேரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 26 பேரும் என 243 பேர் மாயமான மீனவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்தூர் மண்டல மீனவ அமைப்பு 149 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக அறிவித்து உள்ளது.

காணாமல் போன மீனவர்கள் பட்டியலை வெளியிடாத அரசு..!

திருவனந்தபுரம் லத்தீன் கத்தோலிக்க சபை 317 மீனவர்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்து உள்ளது. அதில் 74 பேரின் உடல் கிடைத்ததாகவும் அதில் 37 பேரின் உடல் மட்டும் அடையாளம் தெரிந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்து 560 ஆக உயரும் நிலை உருவாகி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு