Published:Updated:

`இனி செம்மரம் வெட்ட வர மாட்டோம்' - தமிழர்களிடம் கோயிலில் சத்தியம் வாங்கிய ஆந்திர போலீஸ்!

மலையரசு
`இனி செம்மரம் வெட்ட வர மாட்டோம்' - தமிழர்களிடம் கோயிலில் சத்தியம் வாங்கிய ஆந்திர போலீஸ்!
`இனி செம்மரம் வெட்ட வர மாட்டோம்' - தமிழர்களிடம் கோயிலில் சத்தியம் வாங்கிய ஆந்திர போலீஸ்!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ஆஞ்சநேயபுரத்தில் நேற்று அதிகாலை செம்மரம் வெட்டச் சென்றதாக 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 

திருப்பதியை அடுத்து உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் லாரியைச் சோதனை செய்தபோது அதில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் பகுதிகளைச் சேர்ந்த 84 பேர் இருந்ததாகவும் அவர்கள் செம்மரம் வெட்டும் வேலைக்காக அழைத்துவரப்பட்டதாகவும் கூறி ஆந்திர போலீஸ் கைது செய்தது. விசாரணையில் கைதானவர்கள் சமையல் வேலைசெய்ய வந்ததாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது கைதான 84 பேரையும் நிபந்தனை அடிப்படையில் ஆந்திர மாநிலம் விடுதலை செய்துள்ளது. இவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 84 பேரிடமும் ஆந்திர மாநிலப் போலீஸார் சத்தியம் வாங்கி விடுதலை செய்துள்ளனர். 84 பேரையும் ஆஞ்சநேயபுரத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்ற அதிகாரிகள், அங்கு "செம்மரம் தேசிய சொத்து. அதைக் காக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது. அதை அழிக்கக் கூடாது. எனவே, இனி செம்மரம் வெட்ட வர மாட்டோம்" என்று கூறச் சொல்லி சத்தியம் வாங்கினர். பின்னர், ஊர்வலமாக அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டதுடன், விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என்றும், 6 மாத காலம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.