Published:Updated:

'கூடங்குளம்: மின்உற்பத்தி மேலும் தாமதம் ஆகும்'

 'கூடங்குளம்: மின்உற்பத்தி மேலும் தாமதம் ஆகும்'
'கூடங்குளம்: மின்உற்பத்தி மேலும் தாமதம் ஆகும்'
 'கூடங்குளம்: மின்உற்பத்தி மேலும் தாமதம் ஆகும்'

சென்னை: கூடங்குளம் மின் உற்பத்தி மேலும் தாமதம் ஆகும் என்று இந்திய அணுசக்தி  கழகம் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  பிப்ரவரிமாதம் முதல்தான் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கும் என  இந்திய அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தாமதத்திற்கான காரணம்  எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

##~~##
கடந்த டிசம்பர் மாதம் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள்  தெரிவித்தனர். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. அதன்பிறகு பொங்கல் அன்று  சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும், குடியரசு தினத்தில்  இருந்து வணிக ரீதியில் 350 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.