Published:Updated:

`தலையை மொட்டையடித்து தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தினர்!’ - கத்தார் சிறையிலிருந்து மீண்ட மீனவர்கள் கண்ணீர்

ல்லை தாண்டியதாக கத்தார் கடலோரக் காவல்படையினர் சிறைப்பிடித்து, தண்ணீர் கூடத் தராமல் கொடுமைப்படுத்தியதாக குமரி மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனையைச் சேர்ந்த ஜெரோம், அருண்சிங், ஜான்சன், ஜெகிஸ்கான், குளச்சலைச் சேர்ந்த ஆனந்த், கடியப்பட்டணத்தை சேர்ந்த மரியஜான், சகாய ஸ்டெபின் ஆகியோர் கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். இவர்கள், கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி, கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கத்தார் நாட்டு கடலோரக் காவல்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 60 நாள்கள் சிறையில் இருந்த நிலையில், 6 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 23-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு திரும்பிய 6 மீனவர்களில் அருண்சிங், ஜான்சன், ஆனந்த், மரியஜாண் ஆகியோர், நேற்று (மார்ச் 26) நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், "எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கத்தார் கடலோரக் காவல்படையினர் எங்கள் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், தலையை மொட்டையடித்துத் துன்புறுத்தினர். உணவு மற்றும் தண்ணீர்கூட தராமல், எங்களை சித்ரவதை செய்தனர். மத்திய அரசும், தமிழக அரசும் எங்களுக்கு உதவி செய்தன. இந்தியத் தூதரகத்தின் உதவியால் நாங்கள் 6 பேர் நாடு திரும்பியிருக்கிறோம். விசைப் படகின் கேப்டன் ஜெரோமுக்கு அபராதத்தொகை அதிகம் என்பதால், கத்தார் அரசு அவரை விடுவிக்கவில்லை. எங்களுக்கு உதவிசெய்த அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். விரைந்து நடவடிக்கை எடுத்த குமரி கலெக்டரை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக வந்தோம். அதிகாரிகளுடன் மீட்டிங்கில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை. வேறொருநாளில் நாங்கள் கலெக்டரை சந்தித்து நன்றி கூறுவோம்" என்றனர்.