Published:Updated:

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் குடும்பத்தினர் ஆட்சியரிடம் முறையீடு!

இலங்கை வவுனியா நகரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் குடும்பத்தினர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் அன்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும்  கடல் பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படை எல்லை தாண்டியதாகக் கூறி 19 மீனவர்களை கைது செய்தது. விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை இலங்கை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். 

சிறையில் இருக்கும் இருப்பவர்களில் சிலர் உடல்நலக் குறைவால் அவதியுற்று வருகின்றனர். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்களான ராமேஸ்வரம் கரையூரை சேர்ந்த மீனவர் நாகராஜின் மனைவி சீனிபுஷ்பம், ரவியின் மனைவி இந்திரா, கார்த்திக்கின் தாயார் மல்லிகா, ஆரோக்கியதாஸின் மனைவி சின்னராணி ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கை அரசால் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் படகுகளை மீட்டு தரக்கோரியும், இந்திய - இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையினை விரைவாக நடத்த வலியுறுத்தியும் இம்மாதம் 31ஆம் தேதி முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.