Published:Updated:

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்திய போலீஸார்!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்திய போலீஸார்!
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்திய போலீஸார்!

 சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு தலைகவசம் இன்றி இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இலவசமாக ஹெல்மட் வழங்கினார்.

 சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் இன்றி இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23 முதல் 29-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் சார்பில் விழிப்பு உணர்வு பிரசாரம், கல்லூரி மாணவர்களிடையே சாலை விதிகள் குறித்த சிறப்புக் கூட்டங்கள், தலைக் கவசத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி ஹெல்மெட் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடந்த இந்த விழாவில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களுக்கு பேனா, சாக்லேட் இணைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து, அவ்வழியே இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி 'ஹெல்மெட்' அவசியம் குறித்து விளக்கியதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். 

 வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் போலீஸார் இன்று அறிவுரை வழங்கியதுடன் இலவசமாக ஹெல்மெட்டும் வழங்கியது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தியது. 

அடுத்த கட்டுரைக்கு