Published:Updated:

`குட்டையில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர் பலி' – தூத்துக்குடி அருகில் சோகம்!

`குட்டையில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர் பலி' – தூத்துக்குடி அருகில் சோகம்!
`குட்டையில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர் பலி' – தூத்துக்குடி அருகில் சோகம்!

தூத்துக்குடியில் உப்பளக் குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் வழுக்கி விழுந்ததில் ஒருவர் பலியானர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடியில் உப்பளக் குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் வழுக்கி விழுந்ததில் ஒருவர் பலியானர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி, நஸ்நேவிஸ்நகரைச் சேர்ந்த சக்திகுமார், சுனாமிகாலனியைச் சேர்ந்த செல்வம் ஆகிய 2 சிறுவர்களும் தாளமுத்துநகர் - வடக்கு வெள்ளப்பட்டி பகுதி, உப்பளம் அருகில் உள்ள குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கரை ஓரத்தில் இருந்த சக்திகுமார் மண் சரிந்து, எதிர்பாராத விதமாகத் தவறி குட்டைக்குள் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற செல்வமும் விழுந்துள்ளார். இருவரும் தத்தளித்து சத்தம் எழுப்பியுள்ளனர். இதனைக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்களை மீட்டனர். இதில் சக்திகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருந்த செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சக்திகுமார், செல்வம் ஆகிய இருவரும் இஞ்ஞாசியார்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்துள்ளனர். சக்திகுமாருக்கு தாய், தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதால் தன் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த ஏப்ரல் 31-ம் தேதி விளாத்திகுளம் அருகிலுள்ள புதூரைச் சேர்ந்த கந்தவேல் என்ற 10-ம் வகுப்பு மாணவர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். இதில் கந்தவேல் மூழ்கி பரிதாபமாக பலியானார். தொடர்ந்து, கடந்த மே 1-ம் தேதி விளாத்திகுளம் அருகில் உள்ள காடல்குடி கிராமத்தில் 20 அடி ஆழம் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற கவின்குமார், கவுதம் ஆகிய 3  சிறுவர்களும் குட்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த மே 2-ம் தேதி பசுவந்தனை அருகில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் அருண்குமார் என்பவரும், அரவிந்த் என்ற 14 வயது சிறுவனும் குளிக்கச் சென்றனர். நீச்சல் தெரியாத இருவரும், கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், விடுமுறையில் பொழுதைக் கழிக்க.., கடல், ஆறு, குளம், கிணறு,. குட்டைகள் ஆகிய நீர் நிலைகளுக்கு மீன் பிடிக்கவும், குளிக்கவும் நண்பர்களுடன் உற்சாகமாகச் செல்கின்றனர். இதில், நீச்சல் தெரியாவிட்டாலும்  ததும்பும் தண்ணீரைப் பார்த்ததும் பயமின்றி குளிக்கின்றனர். இதனால் பரிதாபமான உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 8 சிறுவர்கள் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  

அடுத்த கட்டுரைக்கு