Published:Updated:

கூடங்குளம்: மார்ச் 11 ல் மீண்டும் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

கூடங்குளம்: மார்ச் 11 ல் மீண்டும் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
கூடங்குளம்: மார்ச் 11 ல் மீண்டும் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
கூடங்குளம்: மார்ச் 11 ல் மீண்டும் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

ராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி வருகிற மார்ச் 11 ஆம்  தேதியன்று மீண்டும் அணு உலை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில்,"கூடங்குளம் அணு உலை தொடர்பான வெள்ளை அறிக்கை  வெளியிடப்படாததை கண்டித்தும், அணு மின்நிலையத்தை மூட வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில்  நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 27 ஆம் தேதி ( இன்று) முற்றுகை  போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

##~~##
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால்  முற்றுகை போராட்டத்தை தள்ளி வைப்பதாக போராட்டக்குழு அறிவித்தது. இதையடுத்து  அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க இடிந்தகரையில் நேற்று ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த அனைத்து சமுதாய  தலைவர்களும் பங்கேற்றனர்.
புகுஷிமா அணு உலை விபத்து நினைவு நாளான மார்ச் 11 ஆம் தேதி கூடங்குளம்  அணுஉலையை கடல் வழியாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கூட்டத்தில்  முடிவெடுக்கப்பட்டது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் முற்றுகை நடத்த  முடிவு செய்யப்பட்டது. இந்த 2 மாவட்டங்களிலும் முற்றுகை போராட்டத்துக்கான  இடங்களை ஊர் கமிட்டியில் தீர்மானித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.