Published:Updated:

கலெக்டர், எஸ்.பி.க்களுக்கு குளு குளு ஆஃபர்

விருதுநகர்: கோடை வெயிலை சமாளிக்க மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்களுக்கு கூடுதலாக ஒரு ஏ.சி., மற்றும் புதிதாக ஏ.சி. கார் வாங்கிக்கொள்ள தமிழக அரசு குளுகுளு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில் முதலமைச்சர் நடத்திய கலெக்டர்கள், எஸ்.பி/க்கள் மாநாட்டில் தங்களுக்கு புதிதாக ஒரு ஏ.சி. கார் வாங்கிக் கொள்ளவும் அலுவலகத்தில் கூடுதலாக ஒரு ஏ.சி. மெஷின் பொறுத்திக் கொள்ளவும் கலெக்டர்களும் எஸ்.பி&/க்களும் பணிந்து கோரிக்கை வைத்தார்களாம்.

அந்தக் கோரிக்கையை உடனடியாக கவனிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டதையடுத்து தற்போது உள்துறை செயலாளர் ராஜகோபாலிடமிருந்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

##~~##
அந்த உத்தரவில், ‘அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு ஏற்கெனவே அவர்களது பங்களா மற்றும் அலுவலகங்களில் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக அவர்களது பங்களா அல்லது அலுவலகத்தில் புதிதாக ஒரு ஏ.சி. மெஷின் வாங்கி பொருத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதுபோல், கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்களின் கார்களில் ஏ.சி. வசதி இல்லையென்றால் புதிதாக ஏ.சி. வசதியுள்ள ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள எந்த மாடல் கார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. புதிதாக கார் வாங்கும் போது பழைய காரை பொதுத்துறையின் மோட்டார் வாகனப்பிரிவிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடையின் வெப்பத்தை எதிர் கொள்ள தயாராகி வரும் கலெக்டர்களுக்கும், எஸ்.பி.க்களுக்கும் இது குளு குளு ஆஃபர் தானே. அதுசரி, புதுசா பொருத்துற ஏ.சி.க்கு கரன்ட்?
- எம்.கார்த்தி