Published:Updated:

மதுரை கலெக்டருக்கு செஞ்சிலுவை சங்க விருது!

மதுரை கலெக்டருக்கு செஞ்சிலுவை சங்க விருது!
மதுரை கலெக்டருக்கு செஞ்சிலுவை சங்க விருது!

 மதுரை: மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் சிறந்த கிளை தலைவருக்கான விருதை, இன்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசய்யா வழங்கினார்.

மதுரை கலெக்டருக்கு செஞ்சிலுவை சங்க விருது!

மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா 2011-12 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்தபோது இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் திருவண்ணாமலை மாவட்ட கிளை தலைவராகவும் இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக அளவில்  சிறந்த மாவட்ட கிளை தலைவராக தேர்வு செய் யப்பட்டார் அன்சுல். அதற்கான பாராட்டுப் பத்திரத்தை கவர்னர் ரோசய்யா அன்சுல் மிஸ்ராவிற்கு இன்று வழங்கினார்.

ஏற்கெனவே , முதலமைச்சர் தனிப் பிரிவிலிருந்து அனுப்பப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டதற்காக தமிழக முதல்வரிடம் இரண்டாம் பரிசை பெற்றிருக்கிறார் அன்சுல் என்பது குறிப்பிடத்தக்கது.

 - குளஸ்