Published:Updated:

பேச்சு தோல்வி : திட்டமிட்டபடி ஏப்.1 முதல் லாரி ஸ்டிரைக்!

பேச்சு தோல்வி : திட்டமிட்டபடி ஏப்.1 முதல் லாரி ஸ்டிரைக்!
பேச்சு தோல்வி : திட்டமிட்டபடி ஏப்.1 முதல் லாரி ஸ்டிரைக்!
பேச்சு தோல்வி : திட்டமிட்டபடி ஏப்.1 முதல் லாரி ஸ்டிரைக்!

புதுடெல்லி: லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, திட்டமிட்டபடி வருகிற எப்ரல் 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்..

டீசல் விலை உயர்வு வாபஸ் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 1 முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

##~~##
இது தொடர்பாக லாரி உரிமையாளர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தை ஏற்கனவே தோல்வியடைந்த நிலையில், இன்று மத்திய தரைவழி போக்குவரத்து செயலர், லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்..
இன்றைய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும், உடன்பாடு எதுவும் எட்டடப்படவில்லை. இதனையடுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.