Published:Updated:

லாரி ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

லாரி ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
லாரி ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
லாரி ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

புதுடெல்லி: அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து  லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு பிரச்னை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக  அறிவித்திருந்தனர். .

இந்த நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை செயலருடன், அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியி்ல் முடிவடைந்தது.இதையடுத்து திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து, டெல்லியில் நேற்று 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்காக மத்திய அரசு, லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் டெல்லியில் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது,

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.