Published:Updated:

கூடங்குளம் அணு உலையில் சோதனை ஓட்டம்: ஒரு மாதத்தில் மின் உற்பத்தி

கூடங்குளம் அணு உலையில் சோதனை ஓட்டம்: ஒரு மாதத்தில் மின் உற்பத்தி
கூடங்குளம் அணு உலையில் சோதனை ஓட்டம்: ஒரு மாதத்தில் மின் உற்பத்தி
கூடங்குளம் அணு உலையில் சோதனை ஓட்டம்: ஒரு மாதத்தில் மின் உற்பத்தி

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலையில் சோதனை ஓட்டம் நடப்பதாகவும், ஒரு மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி  ஓராண்டுகளுக்கு மேல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணு விஞ்ஞானிகளின் வீட்டை வரும் 3ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக அணுஉலை எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

##~~##
இதனிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலையில் சோதனை ஓட்டம் நடப்பதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை ஓட்டம் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கூடங்குளம் அணுஉலையில் இருந்து ஒரு மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.