Published:Updated:

பிரஷர் குக்கரை போன்று தான் கூடங்குளம் அணுஉலையில் சோதனை - இயக்குனர் தகவல்

பிரஷர் குக்கரை போன்று தான் கூடங்குளம் அணுஉலையில் சோதனை - இயக்குனர் தகவல்
பிரஷர் குக்கரை போன்று தான் கூடங்குளம் அணுஉலையில் சோதனை - இயக்குனர் தகவல்

நெல்லை: கூடங்குளம் முதல் அணு உலையில் 3 நாட்களாக அழுத்தம், வெப்பத்தை சோதனை செய்கிறோம் என்று தெரிவித்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இயக்குனர்,  நமது வீட்டில் இருக்கும் பிரஷர் குக்கரை போன்று அணு உலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றார்.
 

பிரஷர் குக்கரை போன்று தான் கூடங்குளம் அணுஉலையில் சோதனை - இயக்குனர் தகவல்

போராட்டக் குழுவின் குற்றச்சாட்டு பற்றி கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இயக்குநரான ஆர்.எஸ்.சுந்தரிடம் கேட்டதற்கு, "கூடங்குளம் முதல் அணு உலையில் இறுதிக்கட்ட சோதனையை கடந்த மூன்று நாட்களாக நடத்திக் கொண்டு இருக்கிறோம். அணு உலையில் அழுத்தம் மற்றும் வெப்பத்தை சோதனை செய்கிறோம்.

##~~##
நமது வீட்டில் இருக்கும் பிரஷர் குக்கரை போன்று அணு உலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இது முழுக்கவும் நீராவி மூலமாகவே நடக்கிறது. குக்கரில் தண்ணீரை கொதிக்க வைத்தால் அதில் இருந்து நீராவி, மேல் இருக்கும் மூடி வழியாக வருவதை போன்று அணு உலையில் இருந்து வருகிறது. அதே போல குக்கரில் பிரஷர் அதிகமானதும் சத்தம் வருவது போல சிறிது சத்தம் வருகிறது.
பிரஷர் குக்கரை போன்று தான் கூடங்குளம் அணுஉலையில் சோதனை - இயக்குனர் தகவல்
ஆனால் இதனை சிலர் தவறாக சித்தரித்து,வதந்தியை பரப்பி மக்களை பீதி அடைய வைக்கிறார்கள். நீராவி புகையை கரும்புகை என்று சொல்லி கண் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் சொல்லி மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்துறாங்க. இந்த சோதனை நடக்கும் போது நான் உள்பட எங்கள் ஊழியர்கள் அனைவருமே உள்ளேதான் இருக்கிறோம். அதனால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவை இல்லை.
தற்போது நடக்கும் இந்த இறுதிக்கட்ட சோதனை முடிந்ததும் அதன் அறிக்கையை அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு அனுப்புவோம். அவர்கள் ஒப்புதல் அளித்ததும் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும். இதற்கான காலக்கெடு எதுவும் கிடையாது என்றாலும் வெகு விரைவிலே மின் உற்பத்தி தொடங்கும் என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்’’ என முடித்துக் கொண்டார்.
அணு உலை கொதிக்க தொடங்கி விட்டதாகவே தெரிகிறது!
-ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்