Published:Updated:

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய பெண்!

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து மயங்கியப் பெண்ணால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை கையில் மனுவோடு ஒரு பெண் வந்தார். ‘திங்கட்கிழமைதான் மனுநீதி நாள். அன்று வந்து மனு தாருங்கள்’ என்று அந்தப் பெண்ணை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் திருப்பி அனுப்ப முயற்சித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய பெண்!

‘நான் விஷம் குடிச்சிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப் போயிடுவேன். அப்புறமா, நான் எழுதிவைத்திருக்கும் மனுவைப் படித்து நடவடிக்கை எடுக்கட்டும்’ என்று அவர் சொல்லவும், ஊழியர்கள் திகைத்து போனார்கள்.

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய பெண்!

தகவல் தெரிந்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தனது கேபினில் இருந்து வெளியே வர, அதற்குள் அந்தப் பெண்மணி மயக்க நிலைக்குப் போய்விட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

##~~##
அந்தப் பெண்மணி வைத்திருந்த மனுவில், ‘எனது பெயர் ஸ்ரீபிரியா. நான் ராஜ்குமார் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் புதுநத்தம் பகுதியில் குடியிருக்கிறோம். நாங்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் வீட்டில் பிரிந்துவந்து விடுமாறு தொல்லைத் தருகின்றனர். எனது அத்தை மகன் என்னைத் திருமணம் செய்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தொல்லைத் தருகிறார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியில்லாமல்தான், விஷம் குடித்துவிட்டு உங்களுக்கு மனு கொடுக்க வந்தேன்’ என்று எழுதியிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டு இருக்கிறார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.
- செ.சல்மான்

படங்கள்: பா. காளிமுத்து