Published:Updated:

``குடும்பத்தைக் காக்க அரசுப் பணி வேண்டும்!" ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி பெண் கோரிக்கை

இரா.மோகன்
``குடும்பத்தைக் காக்க அரசுப் பணி வேண்டும்!" ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி பெண் கோரிக்கை
``குடும்பத்தைக் காக்க அரசுப் பணி வேண்டும்!" ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி பெண் கோரிக்கை

மாற்றுத் திறனாளி பெண் வேலைவாய்ப்பு கோரி  மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளிக்கக் காத்திருந்தது மனதை வேதனை அடையச் செய்தது.


 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மகள் நாகலெட்சுமி (25). சுமார் 3 அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளிப் பெண் இவர். 10-ம் வகுப்பு படித்துவிட்டு தனியார் பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு நர்சிங் படிப்பும் முடித்திருக்கிறார். மீன்பிடி தொழிலாளியான இவரின் தந்தைக்குப் போதிய வருமானம் இல்லாத நிலையில், கிடைக்கும் கொஞ்சநஞ்ச வருவாயையும் குடிப்பதற்கு செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதனால் நாகலெட்சுமியும்  அவரின் தாயாரும் வறுமையில் வாடி வருகின்றனர். 
இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அந்தப் பணிக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்றார். ஆனால், 60% ஊனமுடைய நாகலெட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து தன் குடும்பம் வறுமையில் வாடி வருவதாக தெரிவித்த மாற்றுத்திறனாளியான இந்தப் பெண், தனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் ஏதேனும் அரசுப்பணி வழங்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து வேண்டுகோள் விடுத்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பல மணி நேரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருந்து மனு அளித்த நாகலெட்சுமியின் நிலை அங்கு கூடியிருந்தவர்களை மனம் உருகச் செய்தது.