Published:Updated:

போலீஸாரைக் கண்டித்து வி.எச்.பி. போராட்டம்

போலீஸாரைக் கண்டித்து வி.எச்.பி. போராட்டம்
போலீஸாரைக் கண்டித்து வி.எச்.பி. போராட்டம்

மதுரை: விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போலீஸாரைக் கண்டித்து வி.எச்.பி. போராட்டம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை ஸ்ரீஅய்யனார் கோவிலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. இதன் அருகில் மதுரையின் பிரபலமான உணவகமான டெம்பிள் சிட்டி குழுமத்தினர், ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் கோவில் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்ததாக வி.எச்.பி. அமைப்பு சொன்னது. ஆனால், அவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக ஹோட்டல் நிர்வாகம் புகார் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர் சின்மயா சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

##~~##
இதைக் கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டுக் கழக மாநில தலைவர் பரங்குன்றம் தலைமை தாங்கினார். மாவட்ட ஸத் சங்க அமைப்பளர் பரமசிவம்பிள்ளை, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை நடராஜன் பூசாரி, வி.எச்.பி. மாவட்ட துணைத் தலைவர்கள் நந்தகோபால், பெரியமருது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவராமன் வரவேற்றார். மாநில செயலாளர் சின்மயா சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஹோட்டல் நிர்வாகத்துக்கு எதிராகவும், போலீஸாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
-கே.கே.மகேஷ்
படங்கள்:
பா.காளிமுத்து