Published:Updated:

ஊழல் புகார்: 3 குழுக்களை கலைத்தார் மதுரை கலெக்டர்!

விகடன் விமர்சனக்குழு
ஊழல் புகார்: 3 குழுக்களை கலைத்தார் மதுரை கலெக்டர்!
ஊழல் புகார்: 3 குழுக்களை கலைத்தார் மதுரை கலெக்டர்!
ஊழல் புகார்: 3 குழுக்களை கலைத்தார் மதுரை கலெக்டர்!

மதுரை: ஊழல் புகாரையடுத்து கொத்தடிமை கண்காணிப்புக்குழு உள்பட 3 குழுக்களை கலைத்து மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கலெக்டரைத் தலைவராகக் கொண்டு பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு, கொத்தடிமை முறை கண்காணிப்புக்குழு போன்றவற்றில் அரசு அலுவலர்களுடன், அலுவல் சாரா உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்த அலுவல் சாரா உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.

##~~##
அலுவல் சாரா உறுப்பினர்களில் சிலர், இந்த அடையாள அட்டையை முறைகேடாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். சிலர் மிரட்டல் மற்றும் வசூல் நடவடிக்கைகளில் இறங்கினர்.
இது தொடர்பாக கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்குப் புகார்கள் வந்தன. அடிக்கடி வந்த புகார்களை விசாரித்த போது, தவறு நடந்திருப்பது தெரியவந்ததால் இந்த 3 குழுக்களையும் கலைத்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இக்குழுக்களில் நியமனம் செய்யப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை உடனடியாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.
கே.கே.மகேஷ்