Published:Updated:

மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாசில்தார்! (படம்)

விகடன் விமர்சனக்குழு
மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாசில்தார்! (படம்)
மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாசில்தார்! (படம்)

மதுரை: பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாசில்தார் மீது அவரது மருமகள் மதுரை கலெக்டரிடம் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாசில்தார்! (படம்)

மதுரையில் முத்திரைத்தாள் தாசில்தாராக இருப்பவர் ஞானகுணாளன். இவரது மகனுக்கும், போடியைச் சேர்ந்த குருசாமி மகள் லட்சுமிபிரியாவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக லட்சுமிபிரியா போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தாசில்தார் ஞானகுணாளன், அவரது மகன் ராம் ஜவகர் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், லட்சுமிபிரியா இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

##~~##
புகார் மனுவில் "எனக்கும், ராம் ஜவகருக்கும் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 300 பவுன் நகையும், 20 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கேட்டார்கள். என் வீட்டில் 60 பவுன் நகையும், 5 லட்சம் ரொக்கமும் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.
திருமணத்திற்குப் பிறகு மீதிப் பணம், நகையைக் கேட்டு என் கணவர் ராம்ஜவஹர், மாமனார் ஞானகுணாளன் மற்றும் குடும்பத்தினர் என்னை சித்ரவதை செய்தனர். தனி அறையில் அடைத்து வைத்து உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தினார்கள். மாமனார் ஞானகுணாளன் எனக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்தார்.

அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாசில்தார் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதால் அவரை பதவியில் இருந்து நீக்குமாறு வேண்டுகிறேன்" என கூறப்பட்டிருந்தது.

கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து