Published:Updated:

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக புதிய மனு

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக புதிய மனு
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக புதிய மனு
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக புதிய மனு

புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உதிரி பாகங்களை முழுமையாக சோதனையிட மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி "பூவுலகின் நண்பர்கள்" என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி. சுந்தர்ராஜன் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்துள்ள மனுவில், "பொது நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சில பிரச்னையை விளைவுக்கும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கு மீதான உத்தரவைக் கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்த நிலையில், அணு மின் நிலையத்தில் நிறுவுவதற்காக ரஷிய நிறுவனத்திடம் இருந்து தேசிய அணு மின் கழகம் இறக்குமதி செய்த சில உதிரி பாகங்கள் தரமற்றவை என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் இந்த மாத இறுதியில் செயல்படும் என ரஷிய அரசிடம் இந்தியப் பிரதமர் அளித்த உறுதிமொழியின்படி, மின் உற்பத்திப் பணிகளைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

##~~##
அணு மின் நிலையப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள், அமைப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு, தேசிய அணு மின் கழகம், அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆகியவை திருப்தி அளிக்கும் பதிலை அளிக்கவில்லை.
ரஷியாவின் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அணு மின் நிலையத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள உதிரி பாகங்கள் தரமானவையா? என்பது தெரியவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தகவல் ஆணையத்தில் பெற்ற தகவலில், "தரமான உதிரி பாகங்களைத் தயாரித்ததாக ரஷியாவின் ஜியோ போடோல்ஸ்க் மீது ரஷியாவில் விசாரணை நிலுவையில் உள்ளது' எனத் தெரிய வந்துள்ளது.
எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உதிரி பாகங்களை முழுமையாக சோதனையிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.